Saturday, July 18, 2009

வலியுல்லாஹ்வின் மகத்துவம்



வலியுல்லாஹ்வின் மகத்துவம்



வலி என்னும் பதம் 'வலா' என்ற மூலத்திலிருந்து பிறந்தமையால் அப்பதத்திற்கு சாமீபம், சாட்சியம் என்று பொருள்படும். "மனிதன் எனது இரகசியம், நான் அவனது இரகசியம்" (அல்இன்ஸானு ஸிர்ரீ, வஅனஸிர்ருஹு) என்று அல்லாஹ் கூறியதாக ஹதீது குதுஸியில் வந்துள்ளது. மானிடனை இறைவன் தனக்குப் பிரதிநிதியாக்கி உலகிலுள்ள எல்லாக் கருமங்களையும் அவன் வசம் ஒப்படைத்து அவனைத் தனக்கும் தன்னுடைய சிருஷ்டிகளுக்கும் இடையே நடுமையமாய் நிறுத்தி, சிருஷ்டிகள் ஆண்டவனுடைய தஜல்லியைக் கொண்டு கரிந்து போகாமல் காப்பாற்றக்கூடிய திரையாக ஆக்கியிருப்பதால் மானிடன் ஆண்டவனுடைய உலூஹிய்யத்துடைய தஜல்லியில் வெளியாகி விட்டான். உலூஹிய்யத்துடைய தஜல்லி ஒருவனில் வெளியானால் அவன் ஆண்டவனிடத்தில் சொந்தமான சில பதவிகளைப் பெறுவான். அவ்விதம் பெற்றதும் அவன் உலகத்தார் சகலருக்கும் ஷறஹ்மத் தாகி விடுவான். ஆகவேதான், அவுலியாக்கள் ஆண்டவனது பிரதிநிதிகளாக இருக்கின்றனர். எங்ஙனம் நபி கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உலகத்தார்களுக்கு அருட்பிளம்பு (றஹ்மதுன்லில் ஆலமீன்) ஆக இருக்கின்றார்களோ அங்ஙனமே அவுலியாக்களை ஆண்டவன் அகிலத்தாருக்கு கிருபையாளராகப் புவியின் கண் உண்டாக்கி இருக்கின்றான். ஆகையால், அவர்களும் அவனுடைய பிரதிநிதிகளாகவே இருக்கின்றார்கள், அவர்கள் சொல்வது அல்லாஹ் சொல்வதுதான். அது அல்லாஹ்வுடைய அடியாரின் நாவிலிருந்து வெளியானாலும் சரியே என்பதாக மஸ்னவீ-ஷரீபில் மௌலானா முஹம்மது ஜலாலுத்தீன் ரூமி றஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளார்கள். றஸுலுக்கு வழிப்படுவது அல்லாஹ்வுக்கு வழிப்படுவதென்றும்;, றஸுலுடைய கரத்தை அல்லாஹ் தன்னுடைய கரமென்றும், றஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எறிந்த மண்ணை அல்லாஹ் தானே எறிந்ததாயும் குர்ஆன் ஷரீபில் காணப்படும் ஆயத்துகளெல்லாம் நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு உரியதாயிருந்த போதிலும், குத்புமார்கள், ஆரிபீன்கள் - காமலீன்கள் - அவுலியாக்கள் ஸாலிஹீன்கள் ஆகியோரையும் சார்ந்தவையே. ஏனெனில் இவர்கள் அனைவரும், "உலமாக்கள் அன்பியாக்களுடைய வாரிசுகள்" என்ற ஹதீதுப் பிரகாரம், திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது உண்மை வாரிசுகளாவர். "நான் அல்லாஹ்வுடைய ஒளியில் நின்றுமுள்ளவன்;: சகல வஸ்துக்களும் என்னுடைய ஒளியில் நின்றுமுள்ளவை" (அனமின்னூரில்லாஹி - வகுல்லுஷையின் மின்னூரீ) என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருப்பதை ஆராயந்துணர்ந்தோர் ஒருவாறு அறிவர். சிருஷ்டிகள் அனைத்தும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஜோதியில் சம்பந்தப்பட்டதாயினும், அந்த ஜோதி ஆண்டவனைச் சார்ந்ததேயாம். எந்த வஸ்துவுக்கும் கொடுக்கப்படாத விலை மதிக்கவொண்ணா மாணிக்கமாகிய பகுத்தறிவு, படைப்புகளில் மேலான படைப்பாகிய இன்ஸான் எனும் மானிடனுக்கு மட்டிலுமே கொடுக்கப் பட்டிருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாக விளங்கக் கிடக்கின்றது. அந்தப் பகுத்தறிவைக் கொண்டு மானிடன், நான் எனும் அனானிய்யத்தைப் போக்கி விட்டால் தரிப்பட்டிருப்பது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நூர் என்னும் ஜோதிப் பிரகாசமேதான். அங்ஙனமே அமல் செய்து அந்த நூரில் தரிபட்டிருப்பவர்கள் வலிமார்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர்களாவர். நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடைய பிரதிநிதிகளாவர். நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்; அவர்களுடைய பிரதிநிதிகள் உள்ரங்கத்தில் (ஹகீகத்தில்) அல்லாஹ்வுடைய பிரதிநிதிகளேயாவர். இவர்களைப் பின்பற்றுதல் நேர் வழியாகும். ஏனெனில், இவர்களெல்லாரும் அல்லாஹ்வுடைய அஸ்மாஸிபாத்து வெளியாகும் மள்ஹரு (தானம்) ஆக இருப்பதால் இவர்கள் அவனது பிரதிநிதிகளாயிருந்து ஹுக்முகளை வெளிப்படுத்துகின்றார்கள். இவர்களுடைய நாட்டம், சொல், செயல் அனைத்தும் அவனுடையதாயிருப்பதால் இன்னவர்களுக்கு வழிப்படுதல் ஹகீகத்தில் அவனுக்கு வழிப்படுதலேயாகும். இவர்களுக்கு மாற்றஞ் செய்தல் அவனுக்கே மாற்றம் செய்தலாகும். இறைவனும் குர்ஆன் ஷரீபில், "றஸுலுக்கு வழிபட்டவர் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு வழிப்பட்டவராவர்" (4:80) என்றும்;, "எவனொருவன் அல்லாஹ்வுக்கும் றஸுலுக்கும் மாறு செய்வானோ அவன் நிச்சயமாக வெட்ட வெளிச்சமான வழிகேட்டிலானான்" என்றும், "ஓ, ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு வழிப்படுங்கள். இன்னும் றஸுலுக்கும் உங்களில் நின்றுமுள்ள காரிய கர்த்தர்களுக்கும் (தீனைப் பரப்பக்கூடிய உலமாக்களுக்கும், அவுலியாக்களுக்கும்) வழிப்படுங்கள்" (4:59) என்றும் கூறியுள்ளான். (தப்ஸீர் கபீர், 3-வது பாகம், 243-வது பக்கம்-தப்ஸீர் ரூஹுல்பயான், 1-வது பாகம் 624-வது பக்கம் காண்க.) ஷஎன்னுடைய அவுலியாக்கள் எனது பரிவட்டத்திற்குள்ளிருப்பவர்கள். என்னைத் தவிர வேறு யாரும் அவர்களை அறிய மாட்டார்கள் என்ற ஹதீது குதுஸி அவுலியாக்களின் மகத்துவத்திற்கு நற்சாட்சியாக இருக்கின்றது. மேலும், மஸ்னவீ ஷரீபு முழங்குவதைப் பாருங்கள்:-"அவுலியாக்கள் ஆண்டவனுக்கு உகப்பானவர்கள் - அந்தரங்க, பகிரங்க விஷயங்களை அறிந்தவர்கள் -முத்லக்கான அல்லாஹ்வுக்கு அவுலியாக்கள் கண்ணாடியானவர்கள் -அவுலியாக்கள் அல்லாஹ்வின் சொந்தமான கண்ணாடியாக இருக்கின்றார்கள் -ஒவ்வொரு வலியும் நூஹு அலைஹிஸ்ஸலாம் உடைய கப்பல் என்று அறிஇவர்களை நேசித்தால் நாசம் என்னும் வெள்ளத்தில் நின்றும் தப்பித்துக் கொள்வாய்அல்லாஹ்வுடனிருக்கப் பிரியமுள்ளவர்கள் அவுலியாக்களுடைய சமுகத்தில் இருப்பார்களாக -அவுலியாக்களுடைய சமுகத்தில் நின்றும் விலகி இருப்பீர்களேயானால், உள்ரங்கத்தில்அல்லாஹ்வை விட்டும் தான் விலகி இருக்கின்றீர்கள்" குலிஸ்தான் போதிக்கின்றதாவது :- "அவுலியாக்களுடைய முந்தானையைப் பற்றிப் பிடிப்பதில் பயம் வேண்டாம். ஏனெனில், நூஹு அலைஹிஸ்ஸலாம் அவர்களோடிருக்கையில் வெள்ளத்தைப் பற்றிய அச்சம் எதற்கு!" ஆகவே, இறைவன் அன்று அன்பிய்யாக்களைக் கொண்டு நடத்தியவற்றை எல்லாம் இன்று அவுலியாக்களை கொண்டுதான் நடத்துகின்றான். அவர்களை முன்னிட்டே உலகமும் நிலைபெற்றிருக்கின்றது. ஆகையால் "வலியை அறிவது அல்லாஹ்வை அறிவதைவிட மிகக் கடினம்" என்பதாக ரூஹுல் பயான் பாகம் 9, 531-வது பக்கம்: பாகம் 10, பக்கம் 9 கூறுகின்றன.

Friday, July 17, 2009

குத்பின் பெருமை

குத்பின் பெருமை

உலகில் ஏக காலத்தில் பல எண்ணிக்கையுள்ள, பலவகை படித்தரங்கள் உடைய அவுலியாக்கள் - குதுபுமார்கள் - அப்தால்கள் - அவுத்தாதுகள் - நுகபாக்கள் - நுஜபாக்கள் என்ற பதவி உடையவர்கள், உலக முடிவு நாள்வரையில் இருந்தே வருவார்கள் என்றும், ஹகீகத்தில் ஈருலகையும் கண்காணிப்பவர்கள் அவர்கள் தானென்றும், அவர்களை முன்னிட்டே பலாய், முஸீபத்துகள் விலக்கப்படுவதாயும் ஹதீதுகள் பல காணப்படுகின்றன, அன்னார் அனைவருக்கும் குத்பே அதிபராவார். அன்னாரை கௌது என்றும் சொல்லப்படும். இது பற்றிய ஆதாரங்கள் பல இருப்பினும் சிலவற்றை மட்டிலும் இங்குக் குறிப்பிடுவது போதுமெனக் கருதுகின்றோம். "ஆண்டவா! என் மீது நபிமார்கள் நடந்து திரிந்தார்கள், அவர்களுக்குப் பிறகு நபிகள் பெருமான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சுமந்திருந்தேன். தற்போது அவர்களும் சென்று விட்டார்களே, நான் தனித்துவிட்டேனே, என் மீது எந்த நபியும் இல்லையே" என்பதாய் பூமி பிரலாபித்து இறைவனிடம் முறையிட்டுக் கொண்டது. 'நான் சில அவுலியாக்களை அனுப்புவேன். அவர்களது இருதயங்கள் நபிமார்களது இருதயங்களைப் போலிருக்கும். அவர்கள் யுகமுடிவு வரை உன் மீது சஞ்சரிப்பார்கள்' என்று ஆண்டவன் பூமிக்கு அறிவித்தான்;;;;; என்ற இவ்விஷயத்தை ஸாலிஹான, இறையருள் நேசரான, பெரியார் ஒருவர் தமது உலக யாத்திரையின் போது, நித்திய ஜீவனுடைய ஹஜ்ரத் கிலுறு அலைஹிஸ்ஸலாம் அவர்களைச் சந்தித்த சமயம் அன்னாரைக் கேட்டுத் தெரிந்து கொண்டதாக, 'மவாஹிபுல் மஜீது பீ மனாகிபி ஷாஹில்ஹமீது' எனும் கிரந்தத்தில் காணப்படுகிறது. "அந்த அவுலியாக்கள் ஏகத்தில் 440 பேர்கள். அவர்களுள் நுஜபாக்கள் 300, நுகபாக்கள் 70, அப்தால்கள் 40, அகியார்கள் 10, உறபாக்கள் 7, அன்வார்கள் 5, அவுத்தாதுகள் 4, முக்த்தார்கள் 3, குதுபு ஒருவர். குத்பே அனைவருக்கும் அதிபராவார். இன்னாரை கௌது என்றும் சொல்லப்படும். இவர்களுள் யாரும் மரணமாவார்களாயின் அவர்களுக்கடுத்த (தரஜா) படித்தரத்திலிருப்பவர்கள் அந்த ஸ்தானத்திற்கு மாற்றப்படுவார்கள். அங்ஙணம் பதவியில் உயர்த்தப்படும் போது, கீழ்ப்படித்தரத்திலுள்ள நுஜபாக்கள் காலியாகுமிடத்தில் ஸாலிஹீன்களான முஸ்லீம்களில் ஒருவர் அந்தத் தானத்தில் அமர்த்தப் படுவார்" என்று கிலுறு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறியதாக மனாகிபுகுத்பில் மஜீதிஸ்ஸையிது ஷாஹுல் ஹமீதில் மாணிக்கப்பூhயிpல் மவுலிதிந் நாகூரிய்யில் மர்கதி' என்ற கித்தாபில் மாதிஹுர் ரஸுல் அல்லாமதுஷ் ஷைகு ஸதக்கத்துல்லாஹில் காஹிரிய்யிஸ் ஸித்தீக்கி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களது சீடர் அல்லாமா ஆரிபுபில்லாஹ் மஹ்மூது தீபி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களும், மவாஹிபுல் மஜீது பீ மனாகிபி ஷாஹில்ஹமீது எனும் கித்தாபில், காயல்பட்டணத்தில் பிறந்து கீழக்கரையில் அடங்கி இருக்கும் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் என்ற அல்லாமத்துல் பாளில் ஸையிது முஹம்மது ஆரிபுபில்லாஹி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களும் கூறுகின்றார்கள். இவை போன்ற பல அபூர்வ விளக்கங்களை 'மஜ்மூ அத்துர் ரஸாயில் 2-வது பாகம் 264-வது பக்கத்தில் 'றத்துல் முஹ்த்தார்' இயற்றிய அல்லாமா இபுனு ஆபீதீன் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் விபரமாக வரைந்துள்ளார்கள். மேலும் இமாம் ஷஃரானி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் 'அல்யவாக்கீத்து வல் ஜவாஹிர்' என்னும் கிரந்தத்தில் குத்புமார்களின் தரஜா, பதவிகளை விவரமாக எழுதியுள்ளார்கள். இன்னும், இமாம் இபுனு ஹஜர் மக்கீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் தங்கள் 'பதாவா ஹதீதிய்யாவிலும்' விரிவாக குறிப்பிட்டுள்ளார்கள். மேலும், என்னுடைய உம்மத்துகளில் நாற்பது நபர்கள் நபி இபுராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய இருதயத்தையுடையவர்களாய் என்றும் இருந்தே வருவர். அல்லாஹ்தஆலா அந்த நபர்களைக் கொண்டு பூலோகத்தில் வாழுபவர்களை விட்டும் பிணிகளைப் போக்குவிப்பான். அவர்களுக்காக மழையைப் பொழியச் செய்வான். அன்னவர்களைக் கொண்டுதான் பூலோகத்திலுள்ளவர்களுக்கு உதவி புரியப்படும் என்பதாய் எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருவாய் மலர்ந்தருளிய ஹதீது தபறானீயில் காணக் கிடைக்கின்றது. குத்புக்கே கௌது என்று பெயர். அவர் ஒருவருக்குப் பின் ஒருவராக வருவார். படைப்புகளை எல்லாக் கருமங்களிலும் அன்னார் இரட்சிக்கக் கூடியவராக இருப்பதனால் கௌது என்று பெயர். அன்னவருக்கு வலம், இடம் இருபக்கங்களிலும் அரசர்களுக்கு இருப்பதுபோல இரு அமைச்சர்கள் உள்ளனர். கௌது உடைய உத்தரவு கொண்டு வலது பக்கமிருப்பவர் மறைவுலகங்களான ஆலமுல்கைபு, ஆலமுல் மலகூத்தை நிருவகித்து வருகின்றார். இடது பக்கமிருப்பவர், வெளியுலகமான ஆலமுஷ்ஷஹாதத்தைக் கண்காணித்து வருகின்றார் என்ற விபரத்தை வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்து அரபிக் கலாசாலை மத்ரஸா ஸ்தாபகர், ஹஜ்ரத், அல்லாமா, ஷைகு அப்துல் வஹ்ஹாபு ஸாஹிபு ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களது ஞான குரு ஹஜ்ரத் ஆரிபு பில்லாஹி, அல்லாமா ஷைகு ஷாஹ் முஹியித்தீன் ஸாஹிபு வேலூரி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் ஜவாஹிருஸ்ஸுலூக்கு எனும் கிரந்தத்தில் 114-வது பக்கத்தில் வரைந்துள்ளார்கள். மேலும் இது போன்ற விபரங்கள் ரூஹுல்பயான் தப்ஸீர் பாகம் 2, பக்கம் 363லும், இபுனு அரபி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களைக் கொண்டு விபரமாகச் சொல்வதை அறிவிக்கப்படுகிறது. "அந்தரங்க, பகிரங்க ஆபத்துக்களில் நின்றும் குத்புமார்களைக் கொண்டே ஆண்டவன் அகிலத்தைப் பாதுகாத்துக் கொள்கிறான்" என்று தப்ஸீர் ரூஹுல்பயான் 9-வது பாகம், 102-வது பக்கத்திலும் கூறப்பட்டுள்ளது. மேலும் விபரமாகத் தெரிய முஜ்த்தஹிது, ஹாபிளு அஹா தீதெ நபவிய்யா, இமாம் ஷைகு ஜலாலுத்தீன் ஸுயூத்தி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் இயற்றிய ரிஸாலா-அல்-கபருத்தால்லு அலாவுஜுதின் னுகபா-வல்-அக்த்தாபி-வல்-அவ்த்தாதி-வல்-அப்தால் என்ற நூலையும் அல்லாமா பகீஹ் இபுனு ஆபிதீன் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் இயற்றிய மஜ்முஅதுர் ரஸாயில் நூலையும் நோட்டமிடுக. அவுலியாக்களுள் இரு வகுப்பாருண்டு, ஒரு வகுப்பார் ஆண்டவனுடைய பாதையில் கஷ்டப்பட்டுத் தெண்டித்து அவனளவில் தன்னையழித்து பனாவாகியவர்கள். இவர்களுக்கு கஸ்பீ என்று சொல்லப்படும். மற்ற வகுப்பார் ஆலம் அர்வாஹ் எனும் ஆன்ம லோகத்திலேயே ஆண்டவனால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள். இவர்களுக்கு 'அத்தாயீ' என்று கூறப்படும். குத்பு கௌதுகள் அத்தாயீ வகுப்பைச் சேர்ந்தவர்களே. (ஜவாஹிருஸ்ஸுலுக்கு 114-வது பக்கம் பார்க்க) குத்பு என்ற பதத்திற்கு 'முளை' 'துருவம்' என்றும், கௌது என்ற பதத்திறகு 'இரட்சிப்பவர் - நாயன் நோட்டமிடும் ஸ்தானம்' என்றும் பொருளைப் பயக்கி நிற்பினும், அவற்றின் அந்தரங்கம் பல அரும்பெரும் இரசகியப் புதையல்களைத் தன்னுள் அடக்கியதாய் அமைந்து கிடக்கின்றன. இன்னவர்கள் மூலமாகத் தான் முதலவன் தன்னிருக்கையை அறிக்கை செய்ய வேண்டியதிருக்கிறது அன்றேல், அஞ்ஞான இருள்படர்ந்து மூடி, அகிலம் அந்தகாரத்துள்ளாழ்ந்து பாழ்பட்டுப் போடும். இறைவன் தன்னடியார்களுக்கு அளித்துள்ள கைம்மாறிளக்க வொண்ணாப் பெரும் அருட்கொடைகள் அத்தனையையும் ஒரு தட்டிலும், குத்பை அனுப்பித் தந்த அருட்பெருங்கொடையை மற்றொரு தட்டிலும் வைத்து சீர்தூக்கிப் பார்ப்போமாயின், குத்பால் பெற்ற கிருபையளவே கனத்து முறுகி நிற்கக் காண்போம். இன்னாரைப் பற்றி இறைவன் குர்ஆன் ஷரீபில், "நிச்சயமாக அல்லாஹ் உடைய அவுலியாக்களுக்கு பயமென்பதுமில்லை கவலையென்பதுமில்லை" என்பதாய் (10:62) அருளியுள்ளான்.

பத்திரிகையில் வெளி வந்த செய்தி

பத்திரிகையில் வெளி வந்த செய்தி!

6-11-1964, நூருல் இஸ்லாம் தமிழ் வாரப் பத்திரிக்கையில் 'வாடாமலர்' என்ற பகுதியில் "இஸ்லாத்தின் அதிசய நிகழ்ச்சி" என்ற தலைப்பிலும் வந்துள்ளதையும் நோட்டமிட்டுப் பாருங்கள்."இதர தேசங்களின் இராஜாங்கப் பிரதிநிதிகளும் இராக் அரசாங்கத்தின் சர்வ அதிகாரிகளும் திரண்டிருக்க ஷாஹ்பைசல் அரசருக்கெதிரே முதன் முதலாக ஹஜ்ரத் ஹுதைபா ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களுடைய பரிசுத்த பிரேதம் கிரேன் (பாரந்தூக்கி) மூலமாக பூமியிலிருந்து அதிஜாக்கிரதையாக அப்படியே தூக்கப்பட்டது. அந்த ஜனாஸா ஸ்டிரெச்சர் (விரிப்புப் பலகை) மீது அழகாய் அமைந்து விட்டது. பின்னர், கிரேனிலிருந்து ஸ்டிரெச்சரைத் தனியே பிரித்து, அதை மாட்சிமை தங்கிய ஷாஹ்பைசல், முப்த்தியே அஃஜம், இராக், துருக்கி ஜனநாயகப் பொது அமைச்சர் மிஸ்ரு இளவரசாயிருந்து பாரூக் முதலானோர் தோள் மீது தூக்கிச் சென்று அழகிய கண்ணாடிப் பெட்டகமொன்றுக்குள் வைத்தனர். இதற்குப்பின் ஹஜ்ரத் ஜாபிர் பின் அப்துல்லா அவர்களின் பரிசுத்த மேனியும் அடக்கஸ்தலத்திலிருந்து இதே வகையில் அழகிய முறையில் வெளியில் எடுக்கப்பட்டது.பரிசுத்த மேனியின் கபன் துணியும், அவர்களது முகத்திலிருந்த முடியும் அப்படியே அப்பழுக்கின்றி இருந்தன. இப்பெரியோர்களின் பிரேதங்களைக் கண்டவர்கள், "இவை 1300 ஆண்டுகளுக்கு முன்னுண்டான பிரேதங்கள் தாமா?" என்று நம்ப முடியவில்லை. ஆனால், பிரஸ்தாப மேன்மை மிக்க தேகங்கள் இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு முன்னே இறந்துபட்டவர்களின் தேகங்களைப் போன்றே புத்தம் புதியனவாய்த் தென்பட்டன. இது மட்டிலுமல்ல. பிரஸ்தாப இரு பெரியார்களான ஸஹாபாக்களின் நேத்திரங்கள் இரண்டும் திறந்திருந்தன. அவை நல்ல பளிங்கு போன்ற பளபளப்புடன் தென்பட்டன. இதைக்கண்ட அக்கம் பக்கத்திலிருந்த பக்தர்கள் அவர்களின் கண்களை முத்தியிடத் துடிதுடித்தனர். ஆனால், எவருக்கும் இதற்கான அனுமதி கிடைக்கவில்லை. மாபெரும் டாக்டர்களான வைத்தியர்கள் பலர் இந்நிகழ்ச்சியைக் கண்டு திடுக்கிட்டனர். ஒன்றும் புரியாமல் திகைத்தனர். பிரஸ்தாப நிகழ்ச்சியின் போது பிரபலமான ஜெர்மன் கண் டாக்டர் ஒருவர் இருந்தார். இவர் இந்நிகழ்ச்சியின் போது பெரிய ஆர்வத்துடன் பங்கு கொண்டார். அவர் இத்தகைய தோற்றத்தைக் கண்டதும், பிரஸ்தாபப் பெரியார்களான ஸஹாபாக்களின் பிரேதங்கள், கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் நிலையிலேயே அவருக்கு ஒன்றும் புரியாமல் இராக் பிரதம முப்த்தீ அவர்களுடைய கரத்தைப் பிடித்துக் கொண்டு, "தங்களுடைய மார்க்கமான இஸ்லாம் சத்தியமானதுதான்" என்பதற்கு இந்த ஸஹாபாக்களின் பெருமை மிக்க நிகழ்ச்சியைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டியிருக்கிறது? இதோ யானும் முஸ்லிமாய் விட்டேன். 'லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்' என்று கூறி முஸ்லிமாகி விட்டார். இத்தகைய சந்தர்ப்பத்தில் திரைப்படம் பிடிக்கும் ஒரு ஜெர்மன் கம்பெனி, அதிக தொலை தூரத்திலிருந்தெல்லாம் இந்நிகழ்ச்சியைக் காண வந்திருந்தவர்களுக்குப் பெரிய உபகாரம் செய்தது. பிரஸ்தாபப் படம் எடுக்கும் கம்பெனியார், இராக் அரசரின் அனுமதி பெற்று தங்கள் செலவிலேயெ ஒரு காரியத்தைச் செய்தனர். அடக்கஸ்தலத்தின் மேலே இருநூறு அடி உயரமுள்ள நான்கு கம்பாஸ்களின் மீது ஏறக்குறைய முப்பது அடி நீளமும், இருபது அடி அகலமுமுள்ள டெலிவிஷன் திரைகளைப் பொருத்தினர். இதனால் அங்கு குழுமியிருந்த இலட்சக்கணக்கான மக்கள் நின்றவண்ணமாகவும், அமர்ந்த வண்ணமாகவும் பிரஸ்தாப அடக்கஸ்தலங்கிளிலிருந்து கௌரவமிக்க இரு ஸஹாபாக்களின் பிரேதங்களைத் திறப்பதையும், வெளியே எடுப்பதையும் தங்களின் கண்களால் நிதரிசனமாய நல்ல முறையில் காண சந்தர்ப்பம் கிட்டியது. மறுநாள் பக்தாது நகரிலுள்ள சினிமாக் காட்சி சாலைகளில் எல்லாம் இந்நிகழ்ச்சி திரையிடப்பட்டு மக்களுக்கு காண்பிக்கப்பட்டது. இவ்விஷய நிகழ்ச்சிக்குப் பின்பு பக்தாத் நகரிலேயே ஒரு பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டது. அளவற்ற வகையில் யூதர்களும், கிறிஸ்தவர்களும் தங்கள் குடும்பத்தாருடன் எவ்விதக் கட்டாயமுமின்றி பள்ளிவாயில்களுக்கு வந்து இஸ்லாத்தைத் தங்கள் மனமாற ஏற்றுக்கொண்டனர். நிதரிசனமான இந்நிகழ்ச்சி பண்டையக்கால வரலாற்று ஏடல்ல. இது நமது காலத்திலேயே நமது கண்களால் நிதரிசனமாய்க் கண்ட ஒரு நிகழ்ச்சியாகும். இத்ததைகய அதிசயம் கி.பி.1932. ஆம் ஆண்டில் நடந்த ஒரு விஷயமாகும். இந்நிகழ்ச்சியை ஒவ்வொரு மதத்தினரும். அன்னிய நாடுகளைச் சார்ந்த பல்லாயிரக்கணக்கான மக்களும் கண்ணாரக் கண்டனர். அகிலத்திலுள்ள பல பத்திரிகைகள் இது குறித்து விசேஷமாய்ப் பிரசுரம் செய்தன. அன்றியும், இவ்வடக்கஸ்தலங்கள் பெயர் தெரியாத ஒரு சிலரைச் சார்ந்ததல்ல. இறுதி நபியாம் முஹம்மது ரஸுலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அத்தியந்த நண்பர்களான இரு ஸஹாபாக்களின் பிரேத நிகழ்ச்சியாகும். அவர்கள் யாரென்பதை முஸ்லிம் உலகம் முன்னரே அறியும். அவர்கள் எத்தகையோர் என்பதை முஸ்லிம் உலகம் ஏற்றுக் கொண்டே இருக்கிறது. தற்சமயமோ ஆயிரக்கணக்கான மக்கள் பிரஸ்தாபப் புதிய அடக்கஸ்தங்களுக்குச் சென்று தரிசித்து வருகின்றனர்". இவை போன்ற இன்னும் பல அற்புதங்களையறிய ஆவலுள்ளவர்கள் அல்லாமா ஷைகு யூசுபுந் நபஹானீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களது 'ஜாமியுல் கறாமாத்' எனும் நூலை நோட்டமிடுவார்களாக. ஏதோ சொற்பப் பேர்கள் மட்டும் இத்தகைய பதவியடைந்துள்ளார்கள் என்று எண்ணிக்கொள்ளவேண்டாம். "ஏகறப்பில் ஆலமீனருட்காளான வேழை பங்காளர் கோடி...தேகமழியாத நற்பாகம் படைத்த மாசித்தர்களனந்தங்கோடி" என்பதாய் குணங்குடி மஸ்தான் சாஹிபு வலியுல்லாஹ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களும் எடுத்துக் காட்டியுள்ளார்கள். ஏனவே, மேற்சொன்ன பல சான்றுகளைக் கொண்டு அன்பியா, அவுலியாக்களது சடலங்கள் மவுத்திற்குப்; பின்னும் அழியாது. அவர்கள் ஹயாத்துள்ளவர்கள் என்பது தெளிவாக அறிய முடிகின்றது. குர்ஆன், ஹதீது, இஜ்மாஃ, கியாஸ் ஆகியனவற்றுக்கு முற்றிலும் மாற்றமாக அன்பியா, அவுலியாக்களுக்கு மௌத்திற்குப் பிறகு எத்தகைய சக்தியும் இல்லை என்றும் கபுருகளுக்குள் எலும்புக் கூடுகளாயினும் கிடைக்குமா என்பதே சந்தேகம்தானென்றும், அவர்களது உரோமம் உள்பட மடிந்து உக்கியிறந்து மண்ணோடு மண்ணாகிவிட்டது என்றும் கூறி விதண்டவாதம் செய்பவர்கள் இனியேனும் அறிவு பெறுவார்களாக! அறிஞர்களையடுத்து அறியாமையைப் போக்கிக் கொள்வார்களாக!!

Wednesday, July 15, 2009

வலியின் ஆரம்பம்

வலியின் ஆரம்பம்

அரூபியான அல்லாஹ்தஆலா அகிலத்தில் தனக்குப் பிரதிநிதியாகச் சொரூபியான ஸெய்யிதுனா அபுல்பஷர் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை உண்டாக்கினான்.
"லாயஸாலு அப்தீ... என்னுடைய அடியான் நபிலான வணக்கங்களையும் விருப்புடன் பேணிச் செய்பவனாக நீங்கா வண்ணமாகி எனது முடுகுதலைப் பெறும் வண்ணம் நெருங்கி நான் அவனை நேசிக்கும் அளவுக்கு ஆகிவிடுகிறான்..." என்ற ஹதீது குத்ஸியின் படி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் குர்பு-பறாயிலு, குர்பு-நவாபிலு அமல் செய்து நிறப்பமானபடியால் அல்லாஹ்வுக்கு கலிபாவாயிருந்து, உலகத்தின் காரியாதிகளை நடத்தி வந்திருக்கின்றார்கள். அவர்களில் நின்றுமே பஷரிய்யத்தென்னும் மனுவர்க்கம் இறுதித் தீர்ப்பு நாள் பரியந்தம் வெளியாகிக் கொண்டே வருகின்றது.
ஸெய்யிதுனா ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உள்ரங்கத்தில் விலாயத்தும் வெளிரங்கத்தில் நுபவ்வத்தும் உடையவர்களாயிருந்தார்கள். அவர்களுக்குப் பிறகு பல நபிமார்கள் வெளியாகி இறுதி நபியாக எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தோன்றினார்கள். எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பிறகு நபியில்லையாகையால் அவர்கள் பால் பகிரங்கமாக இருந்த நுபவ்வத் அந்தரங்கமாகி அந்தரங்கமாக இருந்த விலாயத் பகிரங்கமாயிற்று. அதைச் சுமந்தவர்கள் தான் அவுலியாக்களாவர். ஆகவே நபியுடைய முடிவு வலியுடைய ஆரம்பமாகும்.
நுபவ்வத்தாகிய நபித்துவத்தில் தொடர்பு முடிவடைந்து விட்டபடியால் ஒவ்வொரு காலத்திலும் நபியின் பிரதிநிதியாக ஒருவர் நியமனமாகின்றார். அத்தகையவர் யுகமுடிவு நாள் வரை ஏற்பட்டுக் கொண்டேயிருப்பர். அவரே ஆண்டவனுக்கு முடுகுதல் பெற்ற வலி, கூட்டத்தினருக்கு இமாம், அவரே நேர்வழி காட்டக்கூடிய ஹாதியும் மஹ்தியுமாவார். வலது, இடது இரு பக்கங்களிலும் அன்னாருக்கு அமைச்சர்கள் இருக்கின்றனர், அவர்களும் வலிமார்களாகவே இருக்கின்றனர் என்பதாக மௌலானா முஹம்மது ஜலாலுத்தீன் ரூமி ரலியல்லாஹு தஆலா அன்ஹு மஸ்னவி ஷரீபில் குறிப்பிட்டுள்ளார்கள்.
'அல்லாஹுதஆலா நபிமார்களுக்குத் தனது திருவசனமாகிய வஹியைக் கொண்டு பயிற்சியளித்தான். அவுலியாக்களுக்கு தெய்வீக உதிப்பாகிய இல்ஹாமைக் கொண்டு பயிற்சியளிக்கிறான். அவுலியாக்கள் நபிமார்களுடைய நிருவாகப் பொறுப்பாளர்களாகவும் பிரதிநிதிகளாகவும், வாரிசுகளாகவும் ஊழியர்களாகவும் இருக்கின்றார்கள். இத்தகைய நல்லடியார்களே உலகப் பிரஜைகளுடையவும், உலகத்துடையவும் காரியஸ்தர்களாகவும் உலகத்தை நிலைப் பெறச் செய்பவர்களாகவும் இருக்கின்றார்கள். அவர்களைக் கொண்டே உலகமும் நிலைபெற்றிருக்கின்றது. அவர்கள் சிருஷ்டிகளை ஆளுபவர்களாகவும், மெய்ப்பொருளின் பிரதிநிதிகளாகவும் இருப்பது புறத்தோற்றத்தில் அன்று உள்ரங்கத்திலேயாம்" என்பதாக தாஜுல் அவ்லியா ஸெய்யிதுனா முஹ்யித்தீன் அப்துல் காதிரு ஜீலானீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் பத்ஹுர்ரப்பானியில் உபதேசித்துள்ளார்கள். எனவே அன்னாரே சர்வ இரட்சகர், அன்னாரைப் பொறுத்தே சகல லோகக் காரியாதிகளெல்லாம் சுற்றியாடுகின்றன. அன்னாரைக் கொண்டே அல்லாஹுதஆலா உலகங்களைக் காக்கின்றான். அன்னாரே மஹ்தீ என்றும், காத்தமுல் அவுலியா என்றும் சொல்லப்படும். அன்னவர் காலத்தில் அன்னார்தான் காத்தமுல் அன்பியா, ஸெய்யிதுனா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பதவியாகிய மகாமன் மஹ்மூதாவில் தரிபட்டிருப்பவர். அன்னாரே கலீபத்துல்லாஹ் என்ற தெய்வப்பிரதிநிதியாக இருக்கின்றார்" என்பதாக ஆரிபு றப்பானி ஹஜ்ரத் ஸெய்யிது அப்துல்கரீம் ஜியலி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் இன்ஸான் காமிலில் கூறுகிறார்கள்.

மரணத்திற்கப்பாலும் ஹயாத்துண்டா?

மரணத்திற்கப்பாலும் ஹயாத்துண்டா?

இத்தகைய தத்துவத்தையுடையவர்கள் மரணித்து மண்ணோடு மண்ணாகிப் போய் விடுவதில்லை! உடல்களும் நசிப்பதில்லை, ஜீவியத்தில் இருந்தது போலவே கபுரிலும் சடலம் கோர்வை குலையாமலிருக்கும்.
"அன்பியாக்களுடைய உடல்களைத் தின்பதை இறைவன் நிச்சயமாக பூமிக்கு ஹறாமாக்கிவிட்டான்" என்று நபிகரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் திருவாய் மலர்ந்தருளியுள்ள ஹதீது. அபூதாவூது - இபுனு மாஜா - பைஹகீ முதலிய ஸஹீஹான கிரந்தங்களில் காணப்படுகின்றது.
ஆகவே, அவர்கள் ஜீவியத்தில் எப்படியிருந்தார்களோ அப்படியே, பூலோகத்தை விட்டு மறைந்த பின்பும் கபுரில் இம்மைக்கும் மறுமைக்கும் மத்தியிலுள்ள ஆலம் மிதாலாகிய பர்ஜகில் உலகமுடிவு நாள் வரை ஹயாத்தாகவே இருப்பார்கள்.
"அல்லாஹ்வுடைய பாதையில் (பீஸபீலில்) வெட்டப்பட்டவர்களை மவுத்தானவர்களென்று சொல்லாதீர்கள். அவர்கள் ஹயாத்தையுடையவர்கள். ஆனால், அறியமாட்டீர்கள்" (2:154) என்றும், ஆண்டவனுடைய பாதையில் வெட்டப்பட்டவர்களை மரணித்தவர்கள் என்று நினைக்கவும் வேண்டாம். ஆனால் அவர்கள் ஜீவனுள்ளவர்கள். ஆண்டவன் பக்கமிருந்து ரிஸ்கை கொடுக்கப் படுகிறார்கள்ளூ ஆனந்தமாக இருக்கிறார்கள்" (3:169,170) என்றும் அல்லாஹுதஆலா குர்ஆன் ஷரீபில் திருவுளம் பற்றியுள்ளான்.
மேலே கண்ட ஆயத்திற்கு விளக்கமாக, முஷ்ரிக்குடன் யுத்தஞ்செய்து வெட்டப்பட்டு ஷஹீதானாலும் சரிளூ தம்முடைய நப்ஸுடன் ஆத்மார்த்திகப் போர் செய்து அதை வெட்டி வீழ்த்தினாலும் சரி, இரண்டுமே பீஸபீல்தான்" என்று மெய்ஞ்ஞான சொரூபர், ஷைகுல் அக்பர், முஹ்யித்தீன் இபுனு அறபி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் தங்களது தப்ஸீரீல் 1-வது பாகம், 137-வது பக்கத்தில் கூறியுள்ளார்கள்.
இவ்வாறே ஷைகு இஸ்மாயில் ஹக்கீ பரூஸீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் தங்களது தப்ஸீர் ரூஹுல் பயானில் 2-வது பாகம் 126-வது பக்கத்திலும் சொல்லியுள்ளார்கள்.
மேலும் இவ்வாறே தப்ஸீர் அறாயிஸுல் பயான், தப்ஸீர் ஹுஸைன், தப்ஸீர் அஸீஸீ ஆகியவற்றிலும் வருகின்றன. இவ்வாறாகவே, அல்லாமா காழீ தனாவுல்லா பானிபட்டீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களும் தஸ்கிரதுல் மவுத்தா-வல்-குபூரி என்னும் கிரந்தத்தில் கூறுகின்றார்கள்.
இவ்வாறாக அல்லாஹ்வின் பாதையில் ஷஹீதானவர்கள் தத்துவாதிகளைப் பொதிந்து ஜோதிவொளியில் ஐக்கியமாகிவிடுகிறபடியால் ஹயாத்துள்ளவர்கள் நாயனிடம் ரிஸ்கு-உணவு பெறுகிறார்கள். ஒரு இல்லத்திலிருந்து மறு இல்லத்திற்கு மாறுகிறார்கள். இதற்கிணங்க, தன் நபுஸின் பேரில் பீஸபீல் செய்து தன் நபுஸில் செ;லுகின்றவர்களின் ஹயாத்தானது மவுத்தில் ஹயாத்தாய், ஒளியோடு ஒளியாய் சேர்ந்துக் கொள்வதாய் சொல்லப்படுகிறது.
ஒரு சமயம் நபிகள் கோமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தபூக்கு யுத்தத்தில் வெற்றி பெற்று ஜெயபேரிகையுடன் ஸஹாபாக்கள் சகிதம் மதீனா நகருக்குள் நுழைந்த போது, "சிறிய போரிலிருந்து பெரிய போர் அளவில் மீண்டுள்ளோம்" என்று கூறினார்கள்.
உடனே, ஸஹாபாக்கள், யாரஸுலல்லாஹ்! இப்போது பீஸபீல் செய்து திரும்பினோம். இதைவிட பெரிய பீஸபீல் யாது என்று வினவ, பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "நபுஸுடன் போராடுவதுதான் பெரிய (பீஸபீல்) போராட்டம்" என்று விடையளித்தார்கள். இந்த ஹதீது பைஹகீ, இஹ்யா உலூமித்தீன், தப்ஸீர் ரூஹுல் பயான் ஆகியவற்றில் காணப்படுகின்றது.
"அல்லாஹ்வுக்கு வழிபட்டு தன்னுடைய நபுஸுடன் போர் புரிபவர் எவரோ, அவரே வீரர்" என்ற ஹதீதும் மிஷ்காத்தில் காணப்படுகின்றது.
எனவே, பீஸபீலில் போர்புரிந்து உயிர்த் தியாகம் செய்த ஷுஹதாக்களும், நபுஸுடன் போர் தொடுத்து வெற்றியடைந்த மகானுபாவர்களும் மவுத்திற்குப் பின்பும் ஹயாத்தை உடையவர்கள் என்பது குன்றின் மேலிட்ட தீபம் போல தெரியக் கிடக்கின்றது. இந்த அஸ்திவார அடிப்படையிலே மையித்துகள் கேட்கின்றன- பார்க்கின்றன- சுற்றத்தாரையும் அன்பர்களையும் அறிகின்றன - ஸலாமுக்குப் பதிலும் சொல்கின்றன என்னும் விஷயங்கள் பற்றி ஹதீதுகள் பலவற்றைக் குறிப்பிட்டு, இமாம் ஸுயூத்தி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் ஷரஹுஸ்ஸுதூரில் விரிவாக எடுத்துரைத்துள்ளார்கள்.
இதுவே ஸுன்னத்து வல்ஜமாஅத்தாரின் ஏகோபித்த அகீதாவெனும் கொள்கையாகும். மையித்துக்கு உணர்வு இருப்பதால்தான் மவுத்துக்குப் பிறகும், கபுரில் (ஆலம் அஜ்ஸாமுக்கும் ஆலம் அர்வாஹுக்கும் இடையே ஆலம் பர்ஜக்கில்) கேள்விகளும், பாவபுண்ணியங்களுக்குத் தக்க பலாபலன்களும் ஏற்படுகின்றன. அவற்றிற்கு அத்ததைய உணர்ச்சிகள் இல்லை எனின் நன்மை தீமைகளுக்குள்ள பலாபலனை, சுகதுக்கத்தை எவ்வாறு அவை அனுபவித்தறிய முடியும்?
மரணத்திற்குப் பிறகு, கல் கரடுகளைப் போல் கேட்டறிய சக்தியில்லை என்று எண்ணுவது ஷீயா, முஃத்தஸிலா போன்ற வழிகெட்ட கூட்டத்தார்களுடைய கொள்கையாகும்.
"மையித்து செவியேற்காது என்று கூறுகிறவன் மடையனும் (ஜாஹிலும்) வழிகெட்டவனும் (முல்ஹிதும்) ஆவான்." என்பதாய் நான்கு மதுஹபுகளையுடைய ஸுன்னத் வல் ஜமாஅத்து உலமாக்கள் அனைவரும் ஏகோபித்துக் கூறியுள்ளனர்.
பத்ரு யுத்தத்தில் மரணித்த குப்பார்களுடைய பிரேதங்கள் குவிக்கப்பட்டிருந்த இடத்திற்கு, போர் ஓய்நத பின்பு நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சென்று அங்கு நின்று கொண்டு அப்பிரேதங்களை நோக்கி "எங்கள் நாயன் கூறிய வாக்குறதியை நாங்கள் உண்மையாகப் பெற்றுக் கொண்டோம். உங்கள் நாயன் கூறிய வாக்குறுதியை நீங்கள் உண்மையாகப் பெற்றுக் கொண்டீர்களா?" என்று கேட்டபோது அங்கு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடனிருந்த உமர்பாறூக் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் "யா றஸுலுல்லாஹ்! மரணமடைந்தோர் எங்ஙனம் தங்கள் வார்த்தைகளைக் கேட்பார்கள்?, என்று வினவினார்கள். அதற்கு நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "உங்களை விட அவர்கள் நன்றாகக் கேட்பார்கள். உங்களுக்கு வெளிக்காது உண்டு. அவர்களுக்கு ஆன்மார்த்தச் செவியுண்டு, அதனால் அவர்கள் எல்லாவற்றையும் கேட்கிறார்கள்" என்பதாக விடையளித்தார்கள், என்று ஸஹீஹ் முஸ்லிம் கிரந்தத்தில் வருகின்றது.
"மையித்து உனது பாதரட்சையின் சப்தத்தையும் கூட கேட்கின்றது" என்பதாக ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், அபூதாவூது, நஸயீ ஆகிய கிரந்தங்களில் வந்திருக்கின்றது. இது சம்பந்தமாக அநேகமான ஹதீதுகளை குறிப்பிட்டு அதிவிரிவாக, ஷரஹுஸ்ஸுதூர் பீஷரஹில் மவுத்தா வல் குபூர் என்ற நூலில் இமாம் ஸுயூத்தி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்.
உதாரணத்திற்காக சில நிகழ்ச்சிகளை இங்கு கூறுவது பொருத்தமெனக் கருதுகின்றோம்.
நபி பிரான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருவரை இஸ்லாத்தின் பால் அழைத்த போது அவர், குழந்தைப் பருவத்தில் இறந்து போன தனது மகளை உயிர் பெறச் செய்தால் ஈமான் கொள்வதாகக் கூறினார். அக்குழந்தையின் கபுருக்குச் சென்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அக்குழந்தையைக் கூப்பிட்டு அழைத்தார்கள். உடனே அக்குழந்தை, 'அடிபணிந்தேன்' என்று மறுமொழி கூறியது. திரும்பி உலகுக்கு வரக்கூடிய எண்ணமுண்டா என்று கேட்டார்கள். 'அல்லாஹ்வுடைய றஸுலே! ஆண்டவன் மீது சத்தியமாக எனக்கு அத்தகைய எண்ணமில்லை. இம்மையை விட மறுமையையே மேலாகக் காண்கிறேன்' என்று பதில் கூறியது.
இவ்வரலாற்றை இமாம் பைஹகீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் தலாயிலில் சொல்வதாய், ஹுஜ்ஜதுல்லாஹி அலல் ஆலமீன் 422-வது பக்கத்தில் அல்லாமா ஷெய்கு யூசுபுன்னபஹானீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு கூறுகின்றார்கள்.
"நபிமார்கள் ஜீவனுள்ளவர்களாக இருக்கின்றார்கள், அவர்கள் கபுருகளில் (பர்ஜகில்) தொழுது கொண்டுமிருக்கிறார்கள்" என்று அனஸ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களைக் கொண்டு பைஹகீ ஹதீதுக் கிரந்தத்தில் ரிவாயத்துச் செய்யப்பட்டுள்ளது.
(உதாரணம்) மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் செம்மை நிறமான மேட்டின் மீதுள்ள கபுரில் நின்று தொழுது கொண்டிருந்ததை மிஃராஜ் உடைய இரவில் றஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கண்டார்கள் என்ற ஹதீது அனஸ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களைக் கொண்டு ஸஹீஹ் முஸ்லிம், நஸயீ கிரந்தங்களில் ரிவாயத்துச் செய்யப் பெற்றிருக்கிறது.
"நபிமார்கள், ஷுஹதாக்கள், அவுலியாக்கள் ஆகியோர் ஹயாத்துள்ளவர்கள். அவர்களுடைய கபுருகளில் அவர்கள் தொழுது கொண்டும், ஹஜ்ஜு செய்து கொண்டும் இருக்கின்றார்கள். இங்ஙனம் ஸஹீஹான ஹதீதுகள் வந்திருக்கின்றன" என்பதாய் இமாம் றமலீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு கூறுவதாக, அல்லாமா இமாம் ஷெய்கு சுலைமானுல் ஜமல் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் அல்புதூஹாத்துல் அஹ்மதிய்யா 90-வது பக்கத்திலும் அல்லாமா ஷைகு ஹஸனுல் அதவி மிஸ்ரீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் மஷாரிகுல் அன்வார் 67-வது பக்கத்திலும், அல்லாமா ஷைகு யூசுபுன் னபஹானீ மிஸ்ரீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு ஷவாஹிதுல் ஹக்கு 69-வது பக்கத்திலும் வரைகின்றார்கள்.
(உதாரணம்): மக்கா, மதீனாவுக்கிடையே நபி கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சென்று கொண்டிருக்கையில், மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் காதில் கையை வைத்து தல்பியாச் சொல்லிக் கொண்டு அர்ஜுக் ஓடையைக் கடந்து சென்று கொண்டிருந்ததைப் பார்த்ததாகவும், அவர்களது நிறம், முடியின் இலட்சணம் பற்றியும் விபரித்துள்ளார்கள்.
மேலும் யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கம்பளி ஜிப்பாவுடன் சென்னிற ஒட்டகையில் ஷாஷாலுப்த் என்னுமிடத்தில் ஓடையைக் கடந்து சென்று கொண்டிருப்பதைக் கண்டதாயும் ஒட்டகையின் மூக்கணாங்கயிறு பேரீத்த மரத்தின் நாரினால் செய்யப்பட்டிருந்தது என்றும் திருவுளம் பற்றியுள்ளார்கள். இந்த ஹதீது இபுனு அப்பாஸ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களைக் கொண்டு ஸஹீஹ் முஸ்லிமில் ரிவாயத்துச் செய்யப்படுகின்றது.
"அல்லாஹ்வுடைய அவுலியாக்கள் நிச்சயமாக மரிப்பதில்லை. ஆனால் ஓர் இல்லத்திலிருந்து மறு இல்லத்திற்குச் செல்கிறார்கள்." என்ற ஹதீதை, ஹுஜ்ஜத்துல் இஸ்லாம் இமாம் முஹம்மது கஸ்ஸாலீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் அர்பயீன் ஹதீது என்ற நூலிலும், இமாம் பக்ருத்தீன் றாஜீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் தப்ஸீர் கபீர் 3-வது பாகம் 95-வது பக்கத்திலும் குறிப்பிட்டுள்ளார்கள்.
(உதாரணம்): பிரபல்யமான வலியுல்லாஹ் அபூஸயீது கர்ராஜ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் மக்காவிலிருந்த காலத்தில் ஒரு வாலிபரின் மையித்து பனூஷைபா வாசலில் இருந்தது. அதை அவர்கள் உற்றுநோக்கினார்கள். "அபூஸயீதே! ஆண்டவனுடைய நேசர்கள் ஜீவனுள்ளவர்கள். அவர்கள் ஓரில்லத்திலிருந்து மறு இல்லத்திற்கு செல்வதே மரணமாகும் என்பதை அறியவில்லையா?" என்பதாய் அந்த மையித்து சிரிப்புடன் சொல்லிற்றாம். இந்நிகழ்ச்சியை இமாம் ஜலாலுத்தீன் ஸுயூத்தி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் ஷரஹுஸ்ஸுதூர் 86-வது பக்கத்தில் கூறுகின்றார்கள்.
ஸுபிய்யாக்கள் (அவுலியாக்கள்) மவுத்தாவதில்லை. எனினும் மனிதர்களுடைய வெளிரங்கமான பார்வையை விட்டும் மறைகிறதேயல்லாது வேறில்லை. ஏனெனில் அவர்களையும் மவுத்தானார்களென்று சொல்வதற்காகவே.
முஷாஹிதீன், முஹக்கிகீன்களுடைய உடல்களும் கோர்வை குலையாது. குத்ஸியான ரூஹ் நிச்சயமாக ஒருபோதும் அழியாது. இது போல் கியாமத் வரை ஹயாத்தும் அழியாது. இத்தகைய ஹயாத்தும் ரூஹும் உடைய கபுரில் (ஆலமுல்பர்ஜகில்) ஜீவனுள்ளவர்களாகவே இருப்பர். அவர்களுடைய திரேகம் உலகிலிருந்தது போலவே இருக்கும். இப்பதவியுடையவர்கள் அந்தரங்கமான ஹயாத்துடனே இருப்பார்கள், ரூஹுல் குதுஸியுடனுமிருப்பார்கள். மரணித்திற்கப்பாலும் பூமியில் நடந்து திரிவார்கள். அவ்வமயம் எந்த மனிதரும் அவர்களைக் காண்பார்கள். அவர்களுடன் பேசிக் கொள்ளவும் செய்வார்கள். அவர்களை இன்னாரென தெரியவராது. அவர்கள் நாடின போதெல்லாம் கபுரில் மறைந்து விடுவார்கள். அவர்களுடைய திரேகத்தை மண், புழு, பூச்சி, ஐவா மிருகம் எதுவுமே தின்னாது. ஆதிமுதல் அந்தம் வரையில் ஹயாத்து. ரூஹு, ஜிஸ்மு இம்மூன்றுடனும் இறுதிநாள் வரையிலிருப்பார்கள். அவர்கள் புவியிலிருக்கையில் உந்தியின் கீழிருந்து மூச்செழும்பி மூளைக்கேறி வெளிப்படுவது இயற்கை. கபுரில் இயற்கைக்கு மாற்றமாகவே, மூச்சு மேலிருந்து கீழ்நோக்கிச் செல்லும். இதனால் யாக்கையழியாது (வயிற்றிலிருக்கும் சிசுக்களுக்கும், சொர்க்கவாதிகளுக்கும் இவ்வாறே) கபுரில் ஜீவனைப் பெற்றவராயிருந்தால் ஜீவனுக்குள்ள இலட்சணங்கள் ஒன்றுமே குறையாது" என்பதாக மிர்அத்துல் முஷாஹிதீனில் சொல்லப்பட்டுள்ளது.
"வலியுடைய கபுரை ஒருவர் ஸியாரத்துச் செய்தால் அவரை அந்த வலி அறிவார். அவர் ஸலாம் சொன்னால் வலி அதற்குப் பதில் சொல்வார். அவருடைய கபுருக்கு அருகாமையாக ஒருவர் திக்கு செய்தால் அந்த வலியும் சேர்ந்து திக்ரு செய்வார். லாஇலாஹ இல்லல்லாஹு எனும் திக்ரைச் செய்தாலோ அந்த வலி சம்மனங் கொட்டி உட்கார்ந்து திக்ரு செய்பவருடன் சேர்ந்து திக்ரு செய்வார். அவுலியாக்கள் மவுத்துக்குப் பிறகும் ஹயாத்துப் பெற்றவர்களே. மவுத்தின் மூலம் அவர்களை ஒரு வீட்டை விட்டு மறு வீட்டளவில் திருப்பப் பட்டிருக்கிறது. ஹயாத்தில் அவர்களை சங்கை செய்வது போல் மவுத்திலும் சங்கை செய்யவேண்டும். ஒரு வலி மவுத்தானால் அன்னார் பேரில், அன்பியா அவுலியாக்களுடைய அர்வாஹுகள் தொழும்" என்பதாக குத்பு றப்பானீ, இமாம் அப்துல் வஹ்ஹாபு ஷஃரானீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் தபகாத்துல் குப்ரா பாகம் 2 பக்கம் 65ல் கூறுகின்றார்கள்.
"ஸியாரத்துச் செய்ய மிகவும் ஏற்றமான நாள் திங்கள், வியாழன், வெள்ளி, சனி இந் நான்குமாக இருக்கும். ஜும்ஆத் தொழுகைக்குப் பின்பு ஸியாரத்துச் செய்வது மிகவும் சிறப்பானதாகும்" என்று பதாவா ஆலம்கீரியில் வந்துள்ளது.
"மவுத்தானவர்கள் வெள்ளிக்கிழமை இரவிலும், வெள்ளிக்கிழமை முழுநேரங்களிலும், சனிக்கிழமை, காலையிலும், எந்த நேரங்களிலும் ஜியாரத்து செய்பவர்களை அறிவார்கள். இதற்காக அந்நேரங்களில் ஸியாரத்துச் செய்வது முஸ்தஹப்பாகும்" என்பதாக மஷாரிகுல் அன்வாரில் வந்துள்ளது.
"மவுத்தானவர்கள் ஸியாரத்துச் செய்யக் கூடியவரை அறிவார்கள், பேச்சையும் கேட்பார்கள் எனறு ஹதீதுகளின் மூலம் அறியப்பட்டிருக்கிறது" என்பதாயும் மஷாரிகுல் அன்வாரில் சொல்லப்பட்டுள்ளது.
"மையித்தானது தன்னைக் குளிப்பாட்டுபவர்களையும் சுமந்து செல்பவர்களையும், கபுருக்கு முடுகி நிற்பவர்களையும் அறிவார்கள் பேச்சுக்களையும் கேட்பார்கள்" என்று பதாவா குப்ராவில் தலீல் அத்தாட்சிகளுடன் நகல் செய்யப்படுகிறது. மேலும் இவ்வாறே ஷரஹுஸ்ஸுதூரிலும், ஷரஹுபர்ஜகிலும் விரிவாக நகல் செய்யப்பட்டுள்ளது.
ஷைகுல் அக்பர் முஹ்யித்தீன் இபுனு அரபி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் வபாத்தான பிறகு அவர்களே தங்களது வீட்டிற்கு வந்தார்கள். தங்களது வெள்ளாட்டியைக் கண்டு அவளது சுக செய்திகளையும் நிலைமைகளையும் விசாரித்தார்கள். எல்லா விஷயங்களையும் அவள் சவிஸ்தாரமாக எடுத்துக் கூறினாள். அவர்கள் அவளிடமிருந்து விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து சென்றார்கள் என்பதாக புஸுஸுல் ஹிக்கம் உடைய ஷரஹில் இமாம் ஷைகுஜுந்தி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் கூறுவதாக ஸஆதத்துத் தாரைன் 402-வது பக்கத்தில் வரையப்பட்டுள்ளது.
"அவுலியாக்களுக்கு ஆண்டவனால் அருளப்பட்டிருக்கும் கறாமாத்து அதிசயத்தின் பொருட்டால் ரூஹானியத்தான சக்தியைக் கொண்டு ஹயாத்திலும் மவுத்துக்குப் பிறகும் அவர்கள் வெளிப்பட்டு உலகில் நடமாடும் சக்தியுண்டு" என்பதாக இமாம் ஜலாலுத்தீன் ஸுயூத்தி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் அல்கபருத்தால்லு அலா-வுஜுதில் குத்பி வல் அப்தால், என்ற நூலிலும், இமாம் ஸெய்யிது ஷஹாபுத்தீன் அஹ்மது ஹுஸைனீ ஹமவீ ஹனபீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் நபஹாத்துல் குர்பிவல் இத்திஸால், என்ற நூலிலும் கூறுகின்றார்கள்.
"அவுலியாக்களில் பெரும்பாலோர் வபாத்துக்குப் பிறகும் கபுருகளிலிருந்து புறப்பட்டு வெளியே போகவும் செய்கிறார்கள். திரும்பவும் கபுருக்குள் மீளவும் செய்கிறார்கள். போகவர அவர்களுக்கு எத்தகைய தடையுமில்லை" என்பதாக அல்குத்பு இமாம் ஷஃறானி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் லத்தாயிபுல் மினன் 1-வது பாகம் 144-வது பக்கத்தில் வரைந்துள்ளார்கள்.
"நபிகரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தங்களது மவுத்தாகிப் போன ஸஹாபாக்களின் அர்வாஹுகள் சகிதம் எல்லா உலகங்களையும் சுயேச்சையாகச் சுற்றி வருவதை அவுலியாக்கள் கண்கூடாகக் கண்டிருக்கின்றார்கள்" என்பதாக இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் ஆதாரத்துடன் கூறுவதை, தப்ஸீர் ரூஹுல் பயான் பாகம் 10, பக்கம் 99ல் காணலாம்.
இதற்காதாரமாக வபாத்துக்குப் பிறகு நிகழ்ந்த சில சம்பவங்களைக் காண்க:
இமாம் அப்துல் வஹ்ஹாபு ஷஃரானி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் ஸியாரத்துச் செய்வதற்காக ஸெய்யித் உமர் இபுனு பாரிலு ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களுடைய கபுரு ஷரீபுக்குச் சென்றபோது அங்கு அவர்களைக் காணாதபடியால் திரும்பிவிட்டார்கள். புpறகு உமர் இபுனு பாரிலு ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் இமாம் ஷஃரானீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு இடம் சென்று தேவையை முன்னிட்டு வெளியே சென்றிருந்ததாகத் தெரிவித்து மன்னிப்புக் கோரியதாக இமாம் ஷஃறானீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களே தங்களுடைய ஷலதாயிபுல் மினன்' 1-வது பாகம் 144-வது பக்கத்தில் வரைந்துள்ளார்கள்.
ஸெய்யிது ஷைகு அப்பாஸ் முர்ஸீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களை சனிக்கிழமை சூரியோதயத்திற்கு முன்னும், ஸெய்யிது இபுறாஹிமுல் அஃரஜ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களை வெள்ளிக்கிழமை மக்ரிபுக்குப் பின்பும் ஸெய்யிது யாக்கூத்துர் அர்ஷீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களைச் செவ்வாய்க்கிழமை லுஹருக்குப் பின்பும் அவரவர்களுடைய கபுருக்குச் சென்று ஸியாரத்துச் செய்யும் படியும் அவர்களெல்லோரும் குறிப்பிட்ட அந்த நேரங்களில் தான் கபுரில் ஆஜராயிருப்பார்களென்றும், இவ்வுண்மையை அகக்கண்ணை உடையவர்களைத் தவிர மற்றெவரும் அறியமாட்டார்களாகையால், கபுருகளில் அவர்கள் இருக்கவே செய்கின்றார்கள் என்ற எண்ணத்துடன் கஷ்பில்லாதவர்கள் செய்யவேண்டுமென்றும் ஸெய்யிது அலி பதவி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் உபதேசித்திருப்பதாக மேற்சொன்ன லாதயிபுல் மினன் அதே பக்கத்தில் வரையப்பட்டுள்ளது.
ஆகவே, இறப்பு என்பது அழிவுக்குரியதன்று. சில படித்தரங்களைக் கொண்ட ஐடதத்துவ மாறுதலாகும் - ஒரு நிலையிலிருந்து மறு நிலைக்கு முன்னேறிச் செல்வதாகும். ஏனெனில், ஆத்மா அழிவில்லாதது. இறப்பும் பிறப்புமற்ற நிலையிலுள்ளது.
இமாம் கஸ்ஸாலீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் கீமியாயே-ஸஆதத் பீடிகையில் குறிப்பிடும். "மனுஷ்ணன் அனாதியல்லனாயினும் முடிவற்றநித்தியன்" எனும் பொன் மொழியிலிருந்து, மரணத்தோடு மனிதனின் வாழ்க்கை முடிவடைந்து விடவில்லை என்ற உண்மை வெளியாகின்றது. நிர்யாணத்தினின்று ஒரு புதிய வாழ்க்கை உதயமாகி அது என்றும் அழியா நித்தியமாய் நின்று நிலவத் தொடங்குகிறது. ஜடவுலகத்தைப் பற்றி நிற்கும் பூததேகத்தின் சுகபோக இன்பங்களின் வாசல் அடைபட, சகல நுகர்ச்சிகளையும் அந்தரங்கத்திலிருந்து அனுபவித்து வந்த அந்த மனுஷ்யன் என்ற சுயம்பொருள் சூட்சமமாய்க் கிரியை புரிய சக்தி பெறுகின்றது. பிணி, மூப்பு, தளர்ச்சி, இயலாமை முதலிய தங்கட, சங்கடமின்றி மறதியற்ற முழுமனிதப் பண்பும் அவனில் அமைந்து காணப்படுகின்றது.
இவ்வுலகில் சஞ்சரித்து வந்தது போலவே எல்லாவிதமான புலன்களும் வதியத்தக்க யோக்கியதையுடையவனாய் ஆகும் போது தேகமும் அவற்றைத் தொடர்ந்தே நிற்கும். இம்மையில் பூத குணத்தின் மிகைப்பால் ரூஹு உடலுக்குள் மறைந்து காணப்படுவது போல, மறுமையில் ரூஹானிய்யத்தின் மிகைப்பால் தேகம் ரூஹுக்குள் மறைந்து காணப்படும். ஹிஸாபு என்ற கேள்வி கணக்கிற்கும், பாவ புண்ணியத்திற்கேற்ற பலா பலன்களுக்கும் இத்தேகமே பொறுப்பாக விளங்கும்.
"அல்லாஹ்வின் சிருஷ்டிகளுள் எனது ஜோதியே முதன்மையானது" என்று பெருமானார் நபிகரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளியுள்ளார்கள்.
எனவே, ஒளிவாகிய நூர் என்னும் ஒரே அஸ்திவாரத்திலான உயிர்-உடல் என்ற இவ்விரு வஸ்துக்களும் ஒன்றோடொன்று ஐக்கியப்பட்டு மறைவதும், வெளிப்படுவதும் ஆன்ம சக்திமிக்கப் பெரியாரிடத்து அதிசயிக்கத்தக்க கருமமன்று.
"அவுலியாக்களிடத்தில் ஸ்தூலத்திற்கும், சூட்சுமத்திற்கும் மத்தியில் பிரமாதமான வித்தியாசம் ஒன்றுமில்லை. சூட்சுமத்துள் ஸ்தூலம் அடங்குவது அன்னாரிடத்தில் ஒரு பெரிய கருமமன்று".
அல்லாஹ்வின் மெய்யடியாரான அவுலியாக்கள், தாங்கள் சிருஷ்டிகளின் பார்வையிலிருந்து மறைய நாடும் போது மரணம் என்ற போர்வைக்குள் புகுந்து கொள்வதும், அடக்கம் செய்யப்பட்ட பின் ஸ்தூலத்தை சூட்சுமத்துள்ளடக்கி கபுருகளிலிருந்து வெளியே புறப்படுவதும் அன்னவர்களுக்கு எளிதான கருமமாகும். ஆண்டவன் அவர்களுக்கு அத்தகைய தத்துவத்தைக் கொடுத்துள்ளான். இத்தியாதி காரணங்களைக் கொண்டு மரணத்திற்குப் பின்னும் அவுலியாக்கள் ஜீவனுள்ளவர்கள், அழியாத தேகத்தை உடையவர்கள் கிரியைகள் புரியும் சக்தியுடையவர்கள் எனத் தெரிய வருகின்றது".
அடியிற்கண்ட நிகழ்ச்சிகளே இதற்குப் போதிய சான்றுகளாகும்.
ஹஜ்ரத் கிலுரு அலைஹிஸ்ஸலாம் அவர்கள், இமாமுல் அஃலம் அபூஹனீபா ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களது வஃளு மஜ்லிசுக்குத் தினந்தோறும் காலை வேளையில் ஆஜராகி ஷரீஅத்துடைய இல்முகளைக் கற்று வந்தார்கள். இமாம் அவர்கள் வபாத்தான பிறகு அந்த மஜ்லிசு நடைபெறவில்லை. கிலுறு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஆண்டவனது உத்தரவு பெற்று, ஹயாத்தில் நடந்தது போலவே மவுத்துக்குப் பின்பும் இமாமுல் அஃளம் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களது கபுரு ஷரீபுக்கு ஒவ்வொரு காலையிலும் சென்று, ஷரீஅத்துடைய இல்முகளைக் கேட்டுவந்ததாக இமாம் இபுனு ஜவ்ஸீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களைக் கொண்டு 'பதாயிஉ' எனும் பிக்ஹுக் கித்தாபில் வருகிறதாக ஷைகு ஹஸனுல் அதவீ மிஸ்ரீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் மஷாரிக்குல் அன்வார் 69-வது பக்கத்தில் வரைந்துள்ளார்கள்.
நான்கு மதுஹபுடைய இமாம்களுள் ஒருவராகிய அஹ்மது இபுனு ஹம்பலி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களது ஸியாரத்திற்குச் சென்ற குத்பு றப்பானீ கௌதுஸ்ஸமதானீ, முஹிய்யித்தீன் அப்துல் காதிரு ஜீலானி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் அன்னாருடைய கபுறு ஷரீபுக்கெதிரே, அதபுடன் நின்று, "அஸ்ஸலாமு அலைக்கும் யாஇமாமல் கிராம்" (சங்கைக்குரிய இமாம் அவர்களே) என்று அழைத்து ஸலாம் சொன்னார்கள். உடனே, கபுரு ஷரீபு இரண்டாகப் பிளந்தது. இமாம் அவர்கள் ஜோதிப் பிரகாசத்தோடு வெளியே பிரசன்னமாகி கௌதுல் அஃளம் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களைக் கட்டித் தழுவி ஆலிங்கனஞ் செய்தார்கள் நூரானீயான பரிவட்டத்தைப் போர்த்தி, "ஸெய்யிது அப்துல் காதிரே, ஷரீஅத்துடைய இல்முகளும், ஹகீகத்துடைய இல்முகளும் தங்கள்பால் ஹாஜத்தாகின்றன," என்று பகர்ந்து விடைபெற்று மறைந்தார்கள். இச்சம்பவம் ஷபஹ்ஜத்துல்-அஸ்றாரு' கிரந்தத்தில் அறிவிப்பு செய்யப்பட்டிருப்பதாய் ஷதப்ரீஜுல்காத்திர்' 40-வது பக்கத்திலும், ஷபஸ்லுல் கிதாபு' 129-வது பக்கத்திலும் ஹள்ரத் ஷெய்கு அப்துல்ஹக் முஹத்திதுத் திஹ்லவி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் 'ஜுப்ததுல் அஸ்றார்' நூலிலும் காணப்படுகின்றது.
குத்புஸ்ஸமான், இமாம் அப்துல் வஹ்ஹாபு ஷஃறானீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்:-
"நான் எனது குருநாதர் (உஸ்தாது) ஹஜ்ரத் ஸெய்யிது முஹம்மது ஷனாவி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களுடன் அல்குத்புஷ்ஷஹீர், ஸெய்யிது அஹ்மது பதவி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களது தர்காவுக்கு ஸியாரத்திற்காகச் சென்றிருந்தேன். அவ்வமயம் எனது உஸ்த்தாதவர்கள் கபுரு ஷரீபை முன்னோக்கி, 'நாயகமே! இன்ன காரியத்தை முன்னிட்டு மிஸ்ருக்குப் போகப் பிரயாணமாயிருக்கிறேன். விடை கொடுத்தனுப்புங்கள்' என விண்ணப்பித்து நின்றார்கள்.
"அல்லாஹ்வின் மீது தவக்கல் வைத்தவராய் போய் வருக" என்ற நல்வாக்கு கபுருக்குள்ளிருந்து வெளிவந்த சப்தத்தை எனது வெளிரங்கமான இரு காதுகளைக் கொண்டும் நன்கு கேட்டேன்" என்பதாக.
இவ்வரலாற்றை இமாம் ஷஃறானீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் லதாயிபுல் மினன்' 1-வது பாகம், 180-வது பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.
அமீருல் முஃமினீன், ஸெய்யிதுனா அபூபக்கர் ஸித்தீக்கு ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் வபாத்தாகும் போது, "என்னுடைய ஜனாஸாவை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய முபாரக்கான அறையின் முன்னால் வையுங்கள். கதவு திறக்கப்பட்டு, அபூபக்கரை உள்ளே கொண்டு வாருங்கள் என்று உத்தரவு வந்தால் மட்டில் அவ்வறையிலேயே அடக்கம் செய்யுங்கள். இன்றேல், பொதுக்கபுருஸ்தானத்தில் அடக்கி விடுங்கள்" என்று வஸிய்யத்துச் செய்திருந்தார்கள். அவ்வாறே செய்யப்பட்டது. பூட்டப்பட்ட அறைவாயிலின் முன்பு ஜனாஸாவை வைக்கப்பட்டபோது, வாயில் கதவு தானாகவே திறந்து கொண்டது.
"தோழரைத் தோழரிடம் அனுப்பி வையுங்கள்" என்ற உத்தரவு புனிதர் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது ரவுளா ஷரீபிலிருந்து வெளிவந்தது. அவ்விதமே அங்கு அடக்கப்பட்டார்கள். இவ்வரலாற்றை இமாம் பக்ருத்தீன் றாஜீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் தப்ஸீர் கபீர், 5-வது பாகம் 685-வது பக்கத்தில் கூறுவதாய் 'தப்ரீஹுல் அத்கியா பீ-அஹ்வாலில் அன்பியா', பாகம் 2, பக்கம் 376-ல் வரையப்பட்டுள்ளது.
இத்தகைய நிகழ்ச்சிகள், ஆதாரங்கள் இன்னும் எவ்வளவோ காண்பிக்கலாம். உலகத்தார் யாவரும் ஏற்றிருக்கும் இமாம்கள் சம்பந்நதபட்டவற்றையும், அவை பற்றிய அங்கீகரிக்கப்பட்ட (முஃத்தபரான) ஆதாரப்பூர்வமான கிரந்தங்களையுமே ஆதாரங்களாகக் காண்பித்துள்ளோம். அன்பியா, அவுலியாக்கள் மவுத்துக்குப் பின்பும் ஹயாத்துள்ளவர்கள் என்பதற்கு மேற்கூறிய உதாரணங்களோடு இன்னும் இரண்டு தருகின்றோம்.
உதயகிரி முதல் அஸ்தகிரி வரை பிரபல்யமடைந்து, உலகம் ஒப்புக்கொண்டு ஓதிவரும் 'தலாயிலுல்-கைறாத்' இயற்றிய அல்லாமத்துல் பகீஹ், ஆரிபுல் காமில் முஹம்மது இபுனு சுலைமானுல் ஜுஸுலிஷ் ஷாதுலி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களது எண்ணிக்கையற்ற கராமத்துக்களில் நின்றும் ஒன்று ஜாமிவுல் கறாமாத் 1-வது பாகம், 165-வது பக்கத்தில் காணப்படுகிறது. அடியில் அதைக் குறிப்பிட்டுள்ளோம்.
குத்புஷ் ஷஹீர், ஷைகு முஹம்மது இபுனு சுலைமானுல் ஜஸுலிஷ் ஷாதுலி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் ஹிஜ்ரி 870-வது வருஷத்தில் வபாத்தாகி, சூயஸ்பட்டணத்தில் அடக்கப்பட்டார்கள். 77 வருஷங்களுக்குப் பிறகு ஹிஜ்ரி 947-வது வருஷம் அவர்களது கபுரைத் தோண்டப்பட்டது. அவ்வமயம் அவர்களது திரேகம் (தபன்) அடக்கம் செய்யப்பட்ட சமயம் எவ்விதமிருந்ததோ அவ்விதமே உறுப்பில் எத்தகைய சேதமும், மாறுபாடுமின்றி. கபன் துணியில் கூட மண் ஒட்டாமலிருந்தது, அந்தத் திரேகம் கஸ்தூரி வாடையுடன் கமழ்ந்துக் கொண்டிருந்ததைக் கண்ணுற்ற திரளான ஜனங்கள் பேராச்சரியப்பட்டு மயங்கி நின்றனர். ஆண்டவனுடைய பாதையில் ஷஹீதானவர்கள் இறந்தவர்கள் அல்லர். அவர்கள் ஜீவனுள்ளவர்கள். அவர்களுடைய பூத உடல்களை மண் தின்னாது. புழுப்பூச்சி, ஐவாமிருகங்கள் எதுவுமே தீண்டாது என்று அல்லாஹ்வும், றஸுலும் கூறியவாக்குகளை மெய்ப்பிக்கும் அத்தாட்சிகளாகவே அவர்கள் காணப்பட்டார்கள்.
மேலே குறிப்பிட்ட சம்பவத்தின் போது அக்கூட்டத்திற்கு சிலர் சோதிப்பதற்கென்றே, வசீகரத்துடன் ஜோதிப் பிரகாசமாக இலங்கிக்கொண்டிருந்த அந்த வலியுல்லாஹ் அவர்களுடைய திருமுகத்தில் விரலைவைத்து அழுத்திப் பார்த்தனர். விரல் பட்ட இடத்தைச் சூழ்ந்து செந்நிறமாக இரத்தத்தின் அறிகுறி காணப்பட்டது. விரலை எடுத்ததும் அந்த உதிரக்கட்டு உடலில் பரவி மறைந்தது.
பிறகு அவர்களது பரிசுத்தத் திருமேனி ஆப்பிரிக்காவிலுள்ள மொராக்கோவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்பட்டது. அவர்களது கபுரு ஷரீபில் இன்று வரை ஸலவாத்தின் பரக்கத்தை முன்னிட்டு கஸ்தூரி வாடை கமழ்ந்து கொண்டிருக்கிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் ஸியாரத்திற்காகச் சென்று, தலாயிலுல் கைறாத்தை ஓதி நற்பேறுகளைப் பெற்று வருகின்றனர்.
நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது ஸஹாபாத் தோழர்களான ஹஜ்ரத் ஹுதைபத்துல் யமனீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு ஹஜ்ரத் அப்துல்லாஹ் இபுனு ஜாபிருல் அன்சாரி ரலியல்லாஹு தஆலா அன்ஹு ஆகிய இருவரும் ஷஹீதாகி இறாக்கில் பகுதாது நகருக்குச் சமீபமாக ஆற்றோரத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்தார்கள். பிற்காலத்தில் வெள்ளப் பெருக்கால் இரு கபுருகளுக்கும் சேதம் ஏற்பட்டது. அவை ஆற்றில் மூழ்கிப் போய் விடுமோ என்ற பீதியும் உண்டானது. அது சமயம் இறாக்கில் ஆட்சிபுரிந்த அமீர்பைஸல் (மக்கா ஷரீபு ஹுஸைனுடைய மகன்) உலமாக்களிடம் பத்வா (மார்க்கத் தீர்ப்பு) வாங்கி அவ்விரு கபுருகளையும் தோண்டி எடுத்து அவற்றை வேறு இடத்தில் அடக்கம் பண்ண ஏற்பாடு செய்தார். இவ்விஷயம் விளம்பரப் படுத்தப்பட்டது. உலகின் நாலா பக்கங்களிலிருந்தும் இலட்சக் கணக்கான ஜனங்கள் குறிப்பிட்ட தேதியில் அங்கு ஆஜராயினர். அவ்விரு கபுருகளும் 1300 வருடங்களுக்குப் பிறகு தோண்டப்பட்டு அவ்விரு சடலங்களும் வெளியே எடுக்கப்பட்டு உயர்ந்த மேஜை மீது வைக்கப்பட்டன. திரேகத்தில் எவ்வித பேதமும், மாறுபாடும் காணப்படவில்லை. வியர்வை சொட்ட அவ்விரு முகங்களும் ஒளிப்பரகாசத்துடன் இலங்கின.
அனைவரும் இக்காட்சியைக் கண்டு பேராச்சரியத்தில் மூழ்கிப் போயினர். காரீ ஒருவர், "அல்லாஹ்வுடைய பாதையில் வெட்டப் பட்டவர்களை மரணித்தவர்களென்று நீங்கள் நினைக்கவேண்டாம். அவர்களோ ஜீவனுள்ளவர்கள். ஆண்டவன் பக்கமிருந்து அவர்களுக்கு உணவளிக்கப் படுகிறது. அதையருந்தி அவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள்" என்ற கருத்துள்ள குர்ஆன் வேத வாக்கை ஓத ஆரம்பித்தார்.
அதற்கு அத்தாட்சியாகக் கண்முன் பிரத்தியட்சமாக அவ்விரு நாதாக்களின் பரிசுத்தத் திருமேனிகள் இருக்கும் காட்சியை நோக்கும் போது இந்த ஆயத் அவ்வயமந்தான் அருளப்பட்து போல காணப்பட்டதாம்!
பிறகு அங்கு கூடியிருந்த ஜனசமுத்திரம், அலைகள்போல் அடுத்து நின்று தொழுது பகுதாதுக்கு 20 மைல் தூரத்தில் பாழடைந்து இருபிளவாகப் பிளந்து கிடக்கும் கிஸ்றா கோட்டைக்குச் சமீபமாக, ஸஹாபி ஸல்மான் பார்ஸீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களது கபுரு ஷரீபுக்கு அடுத்தாண்மையாக மற்றொரு கட்டிடத்தினுள் அவ்விரு ஸஹாபிகளும் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். இந்நிகழ்ச்சி ஆங்கில வருடம் 1932-ல் நடைபெற்றது. பத்திரிக்கைகள் பலவற்றிலும் இச்சேதி வெளியிடப்பட்டது. மதறாஸில் வெளியிடப்பட்ட தமிழ்ப் பத்திரிகை ஸைபுல் இஸ்லாமிலும், வட நாட்டின் உருதுப் பத்திரிகைகளிலும் இவ்விபரம் வெளிவந்துள்ளது.

Tuesday, July 14, 2009

Vaseela Thedalama

வஸீலா தேடலாமா?
அவுலியாக்களிடம் வஸீலா தேடுதல், உதவி தேடுதல், இரட்சிப்புத் தேடுதல், நாட்ட தேட்டங்களை நிறைவேற்றித் தர கேட்டல் முதலியன வெல்லம் கூடாது - அவை ஷிர்க்காகும் என்று விஷயம் அறியாதவர்கள்தான் கூறித் திரிகிறார்களென்றால், அதை மனதுக்குள் வெறுத்து வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாரிசுகள் எனப் பாத்தியதை கொண்டாடும் மௌலானா மௌலவிகள், அந்த ஜனங்களுக்கு உண்மையை உபதேசித்திருப்பார்களானால் மேன்மையாக இருக்கும். அதை விடுத்து, விஷயமறிந்த அவர்கள் வாய்பொத்தி பாராமுகமாக இருப்பது தருமமன்று.
"அவுலியாக்களை நினைவு கூர்வதால் அல்லாஹ்வின் கிருபாகடாட்சம் உண்டாகின்றது. நாட்ட தேட்டங்கள் கைகூடுகின்றன" என்பதாய் ஸையிதுல் ஆரிபீன் ஹஜரத் அபுல் காஸிம் ஜுனைதுல் பகுதாதி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் திருவாய் மலர்ந்தருளியுள்ளார்கள்.
"அவுலியாக்களிடத்தில் உதவி யொத்தாசை தேடலாம் என்று பலமான ஆதாரங்களைக் கொண்டு ஸுன்னத்து வல் ஜமாஅத்தினர்களால் உறுதிப்படுத்தப்பட்டிருக்க, அவுலியாக்களிடத்தில் உதவி தேடக்கூடாது என்று இக்காலத்தில் ஒரு நவீன கூட்டம் ஏற்பட்டிருக்கிறது" என்று ஆச்சரியத்துடன் ஷைகு அப்துல் ஹக்கு முஹத்திதுத் திஹ்லவீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் 'அஷிஅத்துல் லம்ஆத்-தர்ஜுமா மிஷ்காத்' 3-வது பாகத்தில் தெளிவுபடக் கூறியிருப்பதாக 'பஸ்லுல் கித்தாப்' 119-வது பக்கத்தில் ஷைகு ஷாஹ் முஹிய்யத்தீன் சாஹிபு வேலூரீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் கூறியுள்ளார்கள்.
அன்பியா, அவுலியாக்களைக் கூப்பிட்டு உதவி இரட்சிப்புத் தேடுவது ஸஹாபாக்கள், தாபியீன்கள், ஸாலிஹீன்கள், முஜ்தஹிதான, உலமாக்கள் ஆகியோர்களுடைய கிரியைகளைக் கொண்டு ஆகுமென்பது ஸ்திரமாக்கப் பெற்றிருக்கின்றது. இதை இன்கார் செய்வது அறியாமையாகும்" என்பதாய் மதறாஸ் முப்தி அல்லாமா மஹ்மூது சாஹிபு அவர்கள் பத்ஹுல் ஹக் 62-வது பக்கத்தில் வரைந்துள்ளார்கள்.
ஆண்டவனின் பிரதிநிதியும், மானிடவர்க்கத்தின் ஆதி தந்தையுமான ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், மலக்கூத்துடைய ஆலத்திலிருக்கையில் அல்லாஹ்வின் கட்டளையை வெளிரங்கத்தில் மீறி நடந்தபோது அவர்கள் நாஸுத்துடைய ஆலமாகிய இவ்வுலகில் இறக்கப்பட்டார்கள். அன்று முதல் சுமார் முன்னூறு வருடங்கள் தமது குற்றத்தை மன்னிக்குமாறு ஆண்டவனிடம் பிழை பொறுக்கத் தேடியும் அங்கீகரிக்கப்படவில்லை. நபி முஹம்மது முஸ்த்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வஸீலாவை கொண்டு பாவமன்னிப்பு அங்கீகாரம் கிடைக்கக்கூடும் என்ற எண்ணம் அவர்களுக்கு உண்டானபோது "இறைவா (முஹம்மது ஆகிய) இந்தப் பிள்ளையின் பொருட்டால் (ஆதம் ஆகிய) இந்தத் தகப்பனுடைய பிழையைப் பொறுத்தருள்வாயாக" என்று வஸீலா (சிபாரிசு) தேடினார்கள்.
உடனே, அவர்களுக்கு பாவமன்னிப்பு கிடைக்கப் பெற்றது என்று ஹாக்கிம் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் ஸஹீஹு முஸ்த்தத்ரக்கிலும், பைஹக்கீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் தலாயிலுன்னுபுவ்வாவிலும் ரிவாயத்துச் செய்துள்ளார்கள்.
ஸுபுஹான மவுலிதுடைய முதல் ஹிக்காயத்திலும், மற்றும் பிரபலமான கிரந்தங்களிலும் இவ்விபரம் கூறப்பட்டுள்ளது.
இன்னமும், "முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், அலி ரலியல்லாஹு தஆலா அன்ஹு, பாத்திமா ரலியல்லாஹு தஆலா அன்ஹா, ஹஸன் ரலியல்லாஹு தஆலா அன்ஹு, ஹுஸைன் ரலியல்லாஹு தஆலா அன்ஹு ஆகியவர்களைக் கொண்டு வஸீலாத் தேடியதன் பொருட்டால் ஆண்டவன் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குக் கிருபை செய்தான்" என்று நபி கரீம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருவாய் மலர்ந்தருளியதாக இபுனு அப்பாஸ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களைக் கொண்டுள்ள ரிவாயத்து, தப்ஸீரு துர்ருல் மன்தூரில் இமாம் ஸுயூத்தி ரலியல்லாஹு தஆலா அன்ஹு கூறுகின்றார்கள்.
மேலும், "முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், அலி ரலியல்லாஹு தஆலா அன்ஹு, பாத்திமா ரலியல்லாஹு தஆலா அன்ஹா, ஹஸன் ரலியல்லாஹு தஆலா அன்ஹு, ஹுஸைன் ரலியல்லாஹு தஆலா அன்ஹு ஆகியவர்களைக் கொண்டு ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வஸீலாத் தேடியதை முன்னிட்டு அவர்களின் தவுபா ஒப்பக்கொள்ளப்பட்டது" என்பதாய் நுஸ்ஹத்துல் மஜாலிஸ் 2-வது பாகம், 307-வது பக்கத்தில் வரையப்பட்டுள்ளது.
இன்னமும் பலமான ஸனதைக் கொண்டு, முஹத்திது தப்றானீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு ரிவாயத்துச் செய்கிறார்கள்.
என்னவெனில், நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துஆக் கேட்கும் பொழுது தங்களுடைய ஹக்கைக் கொண்டும் தங்களுக்கு முன்னுண்டான நபிமார்களது ஹக்கைக் கொண்டும் துஆக் கேட்டிருக்கிறார்கள்.
அகில உலகத்திற்கும் அருட்கொடையாகவும், சகல படைப்புகளையும் மன்றாடி கரை சேர்த்து இரட்சிக்கும் வள்ளலாகவும் அவர்கள் இருந்தும் அவர்களே தங்களைக் கொண்டும், மற்றும் நபிமார்களைக் கொண்டும் வஸீலா தேடி இருக்கிறார்கள். மற்றோர்கள் எப்படி அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடாமலிருக்க முடியும்! இவ்விதம் இமாம் ஸுபுக்கி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களுடைய ஷிபா உஸ்ஸிகாம் என்ற நூலிலும், இமாம் இபுனு ஹஜருல் மக்கீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களுடைய ஜவ்ஹருல் முனள்ளம் என்ற நூலிலும் சொல்லப்படுவதாக "அபுளலுஸ் ஸலவாத்து" என்ற கிரந்தத்தில் எடுத்துரைக்கப்படுகிறது.
இங்கு கவனிக்க வேண்டியது யாதெனில், அல்லாஹ்வுக்கு கலீபாவும், ஆதிநபியும், ஆதிபிதாவுமான ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஆண்டவனுடைய ஓர் ஏவலுக்கு வெளிரங்கத்தில் மாறு செய்த ஒரு குற்றத்தை வஸீலாவின்றி மன்னிக்கப்படவில்லை என்றால், கால முழுவதும் கணக்கற்ற குற்றங்கள், பாவங்கள் புரிந்து வரும் நம்போன்றவர்கள் அன்பியா, அவுலியா, காமிலீன்களின் வஸிலாவின்றி ஈடேற்றம் அடைவது எங்ஙனம்? என்பதேயாம்.
(யா அய்யுஹல்லதீன ஆமனுத்தகுல்லாஹ-வப்த்தகூ இலைஹில் வஸீலத்த....)
"ஓ, ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள், மேலும், அவனளவில் வஸீலா தேடிக் கொள்ளுங்கள்" என்பதாக இறைவன் தனது பரிசுத்தத் திருமறையில் கூறியுள்ளான். (5:35)
"ஆணடவனளவில் சேருவதற்கு வஸீலாவை கொண்டேயல்லாமால் வேறு வழியில்லை. வஸீலாவின் தாத்பரியம் அவுலியா காமிலீன்களே" என்;று மேறசொன்ன திருமறை வசன விளக்கத்தில் தப்ஸீர் ரூஹுல் பயான் 2-வது பாகம் 388-வது பக்கத்தில் வியாக்கியானம் செய்யப் பெற்றிருக்கின்றது.
எவனுக்கு (றஸுலுல்லாஹ் மீது) மஹப்பத்து இல்லையோ அவனுக்கு ஈமான் இல்லை" என்பதாகவும் ஹதீது வந்துள்ளது.
"என்னுடைய றஹ்மத்து உடைய கூட்டத்தார் (அவுலியாக்) களிடத்தில் உங்களுடைய தேவைகளைத் தேடிப் பெற்றுக் கொள்ளுங்கள்" என்ற ஹதீதை பைஹக்கீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் ஸுனன் குப்றாவிலும் தப்றானீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் முஃஜம் அவ்ஸத்திலும், அபீஸயீது குத்ரீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களைக் கொண்டு ரிவாயத்துச் செய்கிறார்கள். இந்த ஹதீதையே இமாம் மனாவீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் ஷரஹு ஜாமிஉஸ்ஸகீர் 1-வது பாகத்திலும், முல்லா அலி காரீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் ஷரஹுஐனுல் இல்மிலும் எடுத்துரைத்துள்ளார்கள்.
"நிச்சயமாக அல்லாஹ்வுடைய அடியார்கள் சிலர் இருக்கின்றார்கள், ஜனங்களுடைய தேவைகளை நிறைவேற்றுவதற்கென்றே அவன் அவர்களைச் சொந்தப்படுத்தி வைத்திருக்கின்றான். தங்களுடைய தேவைகளைப் பூர்த்தியாக்கிக் கொள்வதற்காக ஜனங்கள் அவர்களை அண்டுவார்கள். அவர்கள் அல்லாஹ்வின் வேதனையை விட்டும் அச்சம் தீர்ந்தவர்கள்" என்ற ஹதீது இபுனு உமர் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களைக் கொண்டு தபறானியில் வருவதாக அல்ஜாமிஉஸ்ஸகீர், 1-வது பாகம், பக்கம் 78ல் எடுத்துரைக்கப் பெற்றுள்ளது.
(இதா தஹய்யாத்தும் பில் உமூர்p,
பஸ்;த்தயீனூமின் அஹ்லில் குபூரி)
"கருமங்களில் திகைப்படைந்து விடுவீர்களேயானால் கபுருகளை உடையவர்களை (அவுலியாக்களைக்) கொண்டு உதவி தேடிக் கொள்ளுங்கள்" என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய ஹதீது, அப்துல்லாஹ் இபுனு மஸ்வூது ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களைக் கொண்டு முஹத்திது இபுனு அபித்துன்யா கர்ஷீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு (வபாத்து ஹிஜ்ரி 281) அவர்கள் ரிவாயத்துச் செய்வதாக, தஸ்ரீஹுல் அவ்தக் - தர்ஜுமா ஷரஹு பர்ஜக் பக்கம் 319-ல் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
இன்னமும், மேலே குறிப்பிட்ட ஹதீது பற்றி ஸிராஜுல் முஃமினீன், ஷரஹுஐனுல்இல்மு, ஹரஹு பர்ஜக், கஜானத்துல் ஜலாலீ, பதாவா ஸாதுல்லபீப் முதலிய கிரந்தங்களிலும் அறிவிக்கப்பட்டுள்ளது, என்பதாக துல்பகார் ஹைதரிய்யா 213-வது பக்கத்தில் முற்காலத்து முப்தீ முப்தில் பாஜில் ஹைதர் ஷாஹ் காதிரீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
மேலும், ஷரஹுஐனுல் இல்மு 53-வது பக்கத்தில் இமாம் முல்லா அலி காரீ மக்கி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களும், தப்ஸீர் ரூஹுல் பயான், 5-வது பாகம், 380-வது பக்கத்தில் உம்தத்துல் முபஸ்ஸிரீன் ஷைகு இஸ்மாயில் ஹக்கீ பரூஸி ரூமி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களும் தஸ்ரீஹுல் அவ்தக்பீ தர்ஜுமா ஷரஹுல் பர்ஜக் 319-வது பக்கத்திலும் ஆதாரத்துடன் கூறுகின்றார்கள்.
மேற்கண்ட ஹதீதை குத்வதுஸ் ஸாலிக்கீன், ஸுப்தத்துல் ஆரிபீன், சுல்தான் பாஹு வலிய்யுல்லாஹ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் முஹ்கமுல் புகராவில் எடுத்தறிவித்திருப்பதுடன், "அவுலியாக்கள் பூமியின் கீழ் தனித்து கல்வத்திருக்கின்றார்கள். அவர்களுக்கு அச்சமென்பதில்லை. அவர்கள் ஆண்டவனோடிருக்கிறார்கள். மனு, ஜின் யாராகட்டும், தேவையுடையவர்கள். விஷயத்தையுடையவர்களான அவுலியாக்களின் கபுரு (சமாதிக்குழி) களுக்குச் செல்லட்டும்! அப்படிப் போகின்ற அவர்களுடைய கஷ்டங்களெல்லாம் நீங்கி இலகுவாகிவிடும்" என்பதாகக் கூறியுள்ளார்கள்.
"மானிடனுக்கு ஏதாவது கஷ்ட நஷ்டம் ஏற்பட்டால் அவன் அவுலியா உல்லாக்களில் ஒருவரைக் கூப்பிட்டு உதவி தேடட்டும். அந்தவலி உயிரோடிருந்தால் நொடிப்பொழுதில் காற்று அவருக்கு எட்டிவைக்கும். அல்லது அவர் ஞானதிருஷ்டி (கஷ்பு) மூலம் தெரிந்துகொள்வார். ஆவர் மரணித்துப் போயிருந்தால் வானவர் (மலக்கு) அவருக்கு அறிவித்து வைப்பார். அவர் ஆண்டவனிடத்தில் சிபாரிசு தேடி நிவர்த்தி செய்து தருவார். இவ்வாறு காமிலீன்கள் கூட மலக்கின் அறிவிப்பின்றி தாங்களாகவே கேட்டுக்கொள்கின்றார்கள்" என்று ஹதீதில் வருவதாக ஷரஹு பர்ஜக்கில் காணப்படுகிறது என்று பத்ஹுல் ஹக்கு 101-வது பக்கத்தில் சொல்லப்படுகிறது.
"எவருடைய கால்நடைப் பிராணியாவது காணாமற் போய்விட்டால், 'அல்லாஹ்வின் அடியார்களே, அல்லாஹ் உங்களுக்கு நல்லருள் பாலிப்பானாக, தாங்கள் எனக்கு உதவி செய்யுங்கள் என்று கூப்பிட்டுக் கேளுங்கள்" என்பதாக உள்ள ஹதீதை இபுனு அப்பாஸ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களைக் கொண்டு ரிவாயத்துச் செய்யப்படுகிறது என்று ஹிஸ்னுன் ஹஸீனில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏவருடைய கால்நடைப் பிராணியாவது காட்டின் பக்கம் விரண்டோடி விட்டால், "அல்லாஹ்வின் அடியார்களே அதைப் பிடித்து நிறுத்துங்கள் - அல்லாஹ்வின் அடியார்களே - அதைப்பிடித்து நிறுத்துங்கள் - அல்லாஹ்வின் அடியார்களே அதைப்பிடித்து நிறுத்துங்கள் என்று கூவி அழைக்கட்டும் என்பதாக உள்ள ஹதீது, இபுனு மஸ்வூது ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களைக் கொண்டு ரிவாயத்துச் செய்யப்படுகிறதாகவும் மேற்படி ஹிஸ்னுன் ஹஸீன் கிரந்தத்தில் வரையப்பட்டுள்ளது.
"எவருக்காவது உதவி தேவைப்படுமானால் அல்லாஹ்வுடைய அடியார்களே! எனக்கு உதவி புரியுங்கள்! அல்லாஹ்வுடைய அடியார்களே! எனக்கு உதவி புரியுங்கள்! அல்லாஹ்வுடைய அடியார்களே! எனக்கு உதவி புரியுங்கள்! என்று கூறட்டும்" என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் திருவாய் மலர்ந்தருளியிருக்கும் ஹதீது தப்றானீ-ஹிஸ்னுன் ஹஸீன்-ஸஹீஹ் இபுனு அவானா முதலான கிரந்தங்களில் வந்துள்ளன.
இது பற்றி ஆதாரம் 'வஸீலா ஜலீலா' பக்கம் 108லும் ஷதுரருஸ்ஸனிய்யா-பீ-றத்தி அலல் வஹ்ஹாபிய்யா பக்கம் 33-லும், 'பஸ்லுல்-கித்தாபு' பக்கம் 132 லும் பத்ஹுல் ஹக்கு பக்கம் 71 லும் வரையப்பட்டுள்ளது.
மேற்கூறப்பட்ட ஹதீதுகளில் காணப்படும் (இபாதுல்லாஹ்) அல்லாஹ்வுடைய அடியார்கள் என்பதற்குக் கருத்து முஸ்லிமான மனிதர்கள் - முஸ்லிமான ஜின்கள் - மலக்குகள் - ரிஜாலுல் கைபு - (மறைந்து வாழும் மனிதர்கள்) - அப்தால்கள் - அவுத்தாதுகள் - குத்புமார்கள் முதலியவர்களே. இவர்கள் உயிரோடிருப்பினும் சரியே, மரணித்திருப்பினும் சரியே இவர்களை அழைத்து உதவி தேடிப் பெறுதல் ஆகும் என்பதற்கு மேலே சொல்லப்பட்ட ஹதீதுகளே போதிய ஆதாரங்களாகும் என்பதாய 'இஹ்காக்குல்ஹகாயிகு' என்ற நூலில் வரையப்பட்டிருப்பதாக, சென்னைப் பிரதம முப்தீ மௌலானா மௌலவி அல்ஹாஜ் முஹம்மது ஹபீபுல்லலா சாஹிபு கவர்ன்மெண்டு சீப் காஜீ அஹ்ல ஸுன்னத்து வல்ஜமாஅத் அவர்களது பத்வா - தர் - பயானே - ஜவாஸ் இஸ்த்திம்தாது - அன்பியா - வ - அவுலியா உல்லாஹி எனும் பத்வாச் சான்றும், 'வஸீலா ஜலீலா', பத்ஹுல்ஹக்கு முதலிய நூற்களும் கூறுகின்றன.
மேலும் இவ்வாறான அத்தாட்சி 'பரக்காத்துல் இம்தாது - லி - அஹ்லில் - இஸ்த்திம்தாத்' என்ற நூலிலும் காணப்படுகின்றது.
"காபிர்கள் விக்ரகங்களை ஆண்டவனுக்கு இணையாக ஆக்கி, தங்களது தேவைகளை அவைகளே சுயமாக நிறைவேற்றுகின்றன என்று கருதி அவற்றின்பால் உதவி தேடுகிறார்கள். முஸ்லிம்களே அன்பியா, அவுலியாக்களை ஆண்டவனுக்கு இணையாக ஆக்கிவைக்காமல் ஆண்டவனது அஸ்மா ஸிபாத்து வெளியாகும் மள்ஹர் ஆகக் கருதி, அவர்களிடம் உதவி தேடுகிறார்கள்.
விக்கிரகங்களைக் கூப்பிட்டவர்கள் நஷ்டவாளிகளாயினர். அன்பியா அவுலியாக்களைக் கூப்பிட்டவர்கள் ஜெயம் பெற்றவர்களாயினர்" என்று குத்வத்துஸ் ஸாலிக்கீன், மௌலானா, அல்ஹாஜ் ஸெய்யிது ஷாஹ் உமர் ஸாஹிபு காதிரி ஹைதராபாதீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் தப்ஸீர் கஷ்புல் குலூபில்' வரைந்துள்ளார்கள்.
ஷாபியீ மதுஹபின் இமாம் முஹம்மது இப்னு இத்ரீஸுஷ் ஷாபியீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் செய்யதுனா இமாம் மூஸல் காலிம் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களுடைய கபுருஷரீபுக்குச் சென்று ஜியாரத்துச் செய்யும் போது அந்தச் சங்கையான கபுரை நோக்கி, "நிச்சயமாக இது பிராத்தனைகளை ஏற்று ஒப்புக்கொள்ளப்படும் என்று அனுபவத்தில் பரீட்சிக்கப் பட்ட ஒளடதமாகும்" என்று உரைத்தார்கள்.
இவ்விவரத்தை அல்லாமா ஷெய்கு அப்துல் ஹக் திஹ்லவீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் 'அஷி அத்துல் லமஆத் தர்ஜுமதுல் மிஷ்காத்' 1-வது பாகம், 633-வது பக்கத்திலும், இமாம் இபுனு ஜௌஸீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் 'ஸப்வத்துஸ்; ஸப்வா' விலும், ஷெய்கு முஹம்மது மள்ஹர் நக்ஷபந்தீ திஹ்லவி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் 'துர்ருல் முனள்ளம்' விலும் கூறுவதாக, முப்தீ அல்லாமா மஹ்மூது சாஹிபு மத்றாஸி அவர்கள் ஸில்குல் முஅள்ளம், 38-வது பக்கத்தில் எடுத்துரைத்துள்ளார்கள்.
"இமாமுல் அஃளம் ஸெய்யிதுனா அபூஹனீபா ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களுடைய கபுரு ஷரீபு திட்டமாக நமது முறைப்பாட்டைக் கேட்டு தேவைகளை நிறைவேற்றிதர வல்லதாயிருக்கின்றது" என்பதாக, கல்லுடைந்தாலும் சொல்லுடையாத அல்லாமா இமாம் இபுனு ஹஜர்மக்கீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் 'கைராத்துல் - ஹிஸானில்' கூறுவதாக, அல்லாமா முப்த்தீ மஹ்மூது ஸாஹிபு மதறாஸீ அவர்கள் பத்ஹுல் ஹக்கு 78 வது பக்கத்தில் வரைந்துள்ளார்கள்.
"இமாம் ஷெய்கு மஃரூபுல் கர்கீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் பரகத்துச் செய்யப்பட்ட மனிதர்களுள் மேலானவர்கள். ஆவர்களது கபுரு ஷரீபு நிச்சயமாகப் பரீட்சித்து சோதனை செய்யப்பட்ட அவிழ்தமாகும். ஏவரொருவர், அந்தக் கபுரு ஷரீபிலிருந்து (தமது துன்பம், துயர் விலக வேண்டுமென்ற எண்ணத்துடன்) யாதொரு வஸ்த்துவை எடுப்பரேல் அவரது பலாய் முஸீபத்துகள் நிவர்த்தியாக்கப்படும்" என்பதாக, ஷைகுல் இஸ்லாம், ஐக்கரிய்யல் அன்ஸாரீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் "ரஹுரிஸாலத் தில்-குஷைரிய்யா'வில் குறிப்பிட்டுள்ளதாக, ஆரிபுபில்லாஹ், ஷாஹ் முஹிய்யித்தீன் ஸாஹிபு வேலூரி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் ஷபஸ்லுல்-கித்தாப் 115-வது பக்கத்தில் வரைந்துள்ளார்கள்.
ஹஜ்ரத் ஷெய்கு மஃரூபுல் கர்கீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களது வபாத்து ஹிஜ்ரி 201. அவர்களது அடக்கத்தலம் பகுதாதில் இருக்கிறது. அவர்கள் வேண்டுகோளுக்குப் பதில் அளிக்கக் கூடியவர்கள். அவர்களது கபுரு ஷரீபைக் கொண்டு பகுதாது வாசிகள் பிணி நோய் நீங்க ஷிபாவைத் தேடிப்பெறுகின்றனர். அந்தக் கபுரு ஷரீபு அனுபவபூர்வமாகப் பரீட்சிக்கப்பட்ட சஞ்சீவியாகும்" என்று இமாம் அபுல்காஸிம் குஷைரீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு ஷைகுல் இஸ்லாம் ஐகரிய்யல் அன்சாரி ரலியல்லாஹு தஆலா அன்ஹு இருவரும் தங்கள் ரிஸாலாக்களில் வரைந்திருப்பதாய், அல்லாமா முப்த்தி மஹ்மூது ஸாஹிபு மதறாஸீ அவர்கள் 'பத்ஹுல்ஹக்கு 80-வது பக்கத்தில் எடுத்து அறிவிக்கின்றார்கள்.
இவ்வாறாக இமாம் யாபியீ யமனி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களும் சொல்வதாக அல்லாமா ஷைகு யூசுபு நபஹானீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் 'ஜாமிஉல் கறாமத்தில் அவுலியா' 2வது பாகம் 267-வது பக்கத்தில் குறிப்பிடுகிறார்கள்.
குத்புல் அக்பர், ஷைகு அபுல்ஹஸன் அலிய்யுஷ் ஷாதுலி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களது 5-வது கலீபா, அல்குத்பு ஸெய்யிது ஷம்சுத்தின் ஹனபிய்யில்-ஹமவிய்யிஷ்-ஷாதுலீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் தங்களது வபாத்தின் வேளையில், "தேவையுள்ள எவரும் என்னுடைய கபுருக்கு வந்து அவரது நாட்டங்களைக் கேட்பரேல் அவற்றை நான் நிறைவேற்றித் தருவேன். ஏனெனில் எனக்கும் (தேவையைக் கோரும்) அவருக்கும் இடையில் ஒரு முளம் மண்ணே தூரம். தன்னைச் சார்ந்தவர்களை ஒரு முளம் மண் தடுக்குமெயானால் அவன் ஆண் பிள்ளையன்று" என்று சொன்னதாக அல்குத்பு இமாம் அப்துல்-வஹ்ஹாபுஷ் ஷஃறானீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் 'தபகாத்துல்-குப்றா' 2-வது பாகம், 86-வது பக்கத்தில் வரைந்துள்ளார்கள்.
அல்குத்பு ஷெய்கு முஹம்மது இபுனு அஹ்மது பர்கல் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள், "நான் கபுரிலிருந்து வெளிவந்து உலாவக் கூடிய தஸர்ருபாத்தெனும் சக்தியை உடையவன். எவருக்கேனும் ஹாஜத்து நாட்ட தேட்டம், இருக்குமானால், என் முகத்திற்கெதிரே வந்து, என்னிடத்தில் தேவைகளைக் கேட்பாராயின், நான் நிறைவேற்றித் தருவேன்" எனக் கூறியிருக்கிறார்கள் என்பதாக இமாம் ஷஃரானீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள், தபக்காத்து, 2-வது பாகம், 93-வது பக்கத்தில் அறிவித்துள்ளார்கள்.
'எவரொருவருக்கு தமது தேவைகள். நாட்ட தேட்டங்கள், நிறைவேற வேண்டுமென்றிருக்குமானால், அவர் ஸுரத்துல் பாத்திஹா, ஆயத்துல் குர்ஸீ, அலம் நஷ்ரஹ்ஸுரா இவைகளை ஓதி, அவற்றின் தவாபை குத்புல் அக்த்தாபு, ஹஜ்ரத் அஷ்ஷைகு அப்துல் காதிரு ஜீலானி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களுக்கு அளிக்கவேண்டும், பிறகு பகுதாது திசையை முன்னோக்கி பதினொரு எட்டெடுத்து வைத்து, 'யா ஸெய்யிதீ அப்துல் காதிர்' என்று பத்து விடுத்தம் அழைத்து வேண்டி, தமது நாட்ட தேட்டங்களைக் கேட்க வேண்டும்" என்பதாய் இமாம் ஷெய்கு ஜலாலுத்தீன் ஸுயூத்தி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் 'கித்தாபுர்-ரஹ்மா-பித்திப்பி-வல்-ஹிக்மா' என்ற நூலின் 284-வது பக்கத்தில் உரைத்துள்ளார்கள்.
மேலே கண்ட விஷயங்களை நாம் இங்கு ஆழ்ந்து சிந்திக்க வேண்டியது அவசியம். இஸ்லாத்தின் சட்ட திட்டங்களைத் தொகுத்துக் கொடுத்து 'மதுஹபு'வை ஏற்படுத்தித் தந்த இமாம் ஷாஃபீயி முஹம்மது இபுனு இத்ரீஸ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு சட்ட நிபுணர்களாகிய இமாம் இபுனுஹஜர் மக்கீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு, இமாம் குஷைரீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு, இமாம் ஜக்கரிய்யல் அன்ஸாரீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு ஆகியவர்களும், அல்குத்பு ஷம்சுத்தீன் ஹமவீ மிஸ்ரி ரலியல்லாஹு தஆலா அன்ஹு, அல்குத்பு முஹம்மது இபுனு அஹ்மது பர்கல் ரலியல்லாஹு தஆலா அன்ஹு ஆகிய குத்புமார்களும் கபுருகளைக் குறிப்பிட்டு இவ்வாறு கூறியுள்ளார்களென்றால் நோய் நீங்கவும், வறுமை விலகவும், வியாபாரம் விருத்தியாகவும், நாடு செழிக்கவும், நிக்காஹ் முதலான நல்ல காரியங்கள் மங்களமாய் நடைபெறவும், இன்னும் இவை போன்று நேர்மையான நாட்டங்களையும், தேவைகளையும் தாராளமாக வஸீலா மூலம் கேட்டுப் பெறலாம். ஏன் வஸிலாவாகக் கேட்டுப் பெறக்கூடாது என்பதே.
இவையனைத்திற்கும் மேம்பட்டு, அவுலியாக்களுக்கெல்லாம் அரசரான, அல்குத்புர் ரப்பானீ, வல் கௌதுஸ் ஸமதானீ ஸெய்யிதுனா முஹிய்யித்தீன் அப்துல் காதிரு ஜீலானி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் 'ஐய்னிய்யா'வில் கூறியுள்ளதைப் புத்திசாலிகள் படித்துப் பயனடைவார்களாக.
அவர்கள் உபதேசித்துக் கூறுவது யாதெனில்:-
"நீ ஓதிப் படித்த புத்தகங்களை விட்டுவிடு. ஏனெனில் அந்த அவுலியாக்களுடைய நடப்புக்கள் அநேகக் கித்தாபுகளில் நின்றுதான் ஏற்பட்டுள்ளன. எங்களுடைய வழிக்கும் அந்த அவுலியாக்கள் தான் வழிகாட்டிகள். நாம் ஆதரவு வைப்பதற்கு அன்னவர்களே போதுமான புதையல்கள்.
அந்த அவுலியாக்களைப் பின்பற்றியவன் நேர்வழி பெறுவான். எவன் பின்பற்றவில்லையோ அவன் வழிகெட்டான்.
ஆபிதீன்கள் எல்லோரும் அந்த அவுலியாக்களையே பற்றிப் பிடித்துக் கொண்டார்கள். அந்த அவுலியாக்கள்தான் மனிதரென மதிக்கப்படுபவர்கள்.
அவர்களின் திருச்சமுகத்தை நீ பற்றிப் பிடித்துக்கொள்.
உலகத்தார்கள் பிரதிப் பிரயோஜனங்கள் பெறுவதற்கு அந்த அவுலியாக்களே ஒதுங்கும் தலங்களாகும்" என்பதே.
அஷ்ஷெய்கு முஹிய்யித்தீன் இபுனு அறபீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் இமாம் பகுறுத்தீன் றாஜீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களுக்கு உபதேசமாக எழுதியதாவது: யாதெனில்:-
"எம்மனிதன் உண்மை என சாதிக்க, தர்க்கவாதம் புரிவதை விட்டு வெளிப்படவில்லையோ, அம்மனிதன் அவுலியாக்களிடத்தில் ஒரு போதும் பூரண ஈமான் உடையவனாக மாட்டான். ஏனெனில், அந்த மனிதன் தான் கற்ற சொற்ப கல்வியை எல்லையில்லாததாகக் கண்டு, அந்த அற்பத்தையே துருவி ஆராய்வதில் தனது மேலான வயதைப் போக்கடிக்கிறான். அசல் நோக்கத்தை அடைந்தவனாக மாட்டான்" என்பதே.
இமாம் அஹ்மது இபுனு ஹம்பல் ரலியல்லாஹு தஆலா அன்ஹு, ஷைகு இஸ்ஸுத்தீன் ரலியல்லாஹு தஆலா அன்ஹு ஆகிய இருவரும் தகுதி வாய்ந்த சிறந்த இரு முஹத்திதுகள், இன்காருக்குப் பிறகே இவர்கள் அவுலியாக்களின் அந்தரங்கப் பேறுகளைப் பெற்றார்கள்.
இமாம் அஹ்மது இபுனு ஹம்பல் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் ஹஜரத் அபூஹம்ஜா பகுதாதீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களுடைய மஜ்லிஸில் உட்கார்ந்த பிறகுதான் இமாம் அவர்களுக்கு அகக்கண்கள் திறந்தன.
இமாம் அஹ்மது இபுனு ஹம்பல் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் தமது குமாரருக்கு செய்யும் உபதேசத்தில், "மகனே! அவுலியாக்கள் பால் ஒரு பொழுதும் கெட்ட எண்ணம் கொள்ளாதே! அவர்களுடைய சகவாசத்தை ஒரு போதும் மறந்திருக்காதே! அவர்கள் அகமியத்தின் பொக்கிஷங்களை அறிந்தவர்கள், நாமோ, அவ்வாறு அறிந்திராத துரதிர்ஷ்டசாலிகள்" என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
ஷெய்கு இஸ்ஸுத்தீன் ரலியல்லாஹு தஆலா அன்ஹு, குத்புல் அக்பர் அபுல்ஹஸன் அலிய்யுஷ் ஷாதுலீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு உடைய சகவாசத்தால் பெரும் பேறுகளைப் பெற்றார்கள்.
"அவுலியாக்கள் தான் ஹகீகத்தை உடையவர்கள். அவர்களுடைய நேர்மைக்கு இதுவே போதுமான அத்தாட்சியாகும். மற்றவர்கள் வெறும் பழக்க வழக்கங்களில் அகப்பட்டுக் கொண்டு கிடக்கின்றனர்" என்று ஷெய்கு இஸ்ஸுத்தீன் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.
உண்மை இவ்வாறிருக்க, 'வஸீலா'வை நிராகரிக்கக்கூடிய வரம்பு மீறிய கூட்டத்தார்கள், அன்பியாக்களை, அவுலியாக்களை, யாரஸுலல்லாஹ்! யாவலிய்யல்லாஹ்! என்பன போன்ற சொற்களைக் கொண்டு அழைக்கக் கூடாது என பலமாக விவாதம் புரிகின்றார்கள். தங்களது குருட்டுத்தனமான இத்தகைய விதண்டாவாதத்திற்குச் சாதகமாகப் பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களின் கருத்தைத் தவறான முறையிலாக்கி தங்களுக்குச் சாதகமான ஆதாரங்கள் என மனப்பால் குடிக்கின்றனர்.
(பலா தத்ஊமஅல்லாஹி அஹதன்) என்ற 72:18 குர்ஆன் ஆயத்திற்கு, "எனவே, அல்லாஹ்வுடன் எவரையும் வணங்காதீர்கள்" எனவும்.
("வலா தத்உ மஅல்லாஹி இலாஹன் ஆகர லா இலாஹ இல்லாஹுவ) என்ற 28:88 குர்ஆன் ஆயத்திற்கு "அல்லாஹ்வுடன் வேறொரு நாயனை நீர் வணங்காதீர் அவனைத் தவிர்த்து (வணக்கத்துக்குரிய) நாயன் (வேறு) இல்லை" எனவும், ஸுன்னத்து வல்ஜமா அத்து முபஸ்ஸிரீன்கள் கருத்துத் தெரிவித்திருக்க வஸீலாவை நிராகரிக்கக்கூடிய மேற்சொன்ன, அகீதாப் பிசகிய கூட்டத்தார்கள், மேற்கண்ட இரு ஆயத்துக்களுக்கும் "நீங்கள் அல்லாஹ்வுடன் வேறொருவரையும் அழைக்கவேண்டாம்" எனவும், ஷநீர் அல்லாஹ்வுடன் வேறொரு நாயனை அழைக்க வேண்டாம். அவனைத் தவிர (வணக்கத்துக்குரிய) நாயன் (வேறு) இல்லை" எனவும் அர்த்தம் கற்பித்து தங்களது விதண்டாவாதத்திற்கு ஆதாரங்காட்ட முற்படுகின்றனர். இவை போன்ற "லாதத்உ" என்று வரக்கூடிய மற்ற ஆயத்துக்களைக் கொண்டும் இவர்கள் இவ்வாறே மேறகோள் காட்டுகின்றனர்.
அழைத்தல், விளித்தல், கூப்பிடுதல் என்ற வார்த்தைகளுக்குரிய கருத்துடன் திருமறையில் 'துஆ' எனும் பதம் சில இடங்களில் பிரயோகிக்கப்பட்டிருக்கிறது. 'வணங்குதல்' என்ற கருத்துடனும் திருமறையில் சில இடங்களில் 'துஆ' எனும் பதம் பிரயோகிக்கப்பட்டிருக்கிறது.
'துஆ' எனும் சொல்லிற்கு இருவிதமான பொருட்கள் உள்ளன. வணக்கத்தைப் பொதிந்தில்லாத சாதாரண அழைப்பு, விளிப்பு, கூப்பிடுதல் என்ற வகைப் பொருள் ஒன்று.
இபாதத்து எனும் வணக்கத்தைத் தன்னுள்ளடக்கிக் கொண்ட பிராத்தனையான அர்த்தத்துடன் கூடிய பொருள் மற்றொன்று.
முந்திய வகை பற்றி இறைவன் தனது பரிசுத்தத் திருமறையில் (உத்வு இலாஸபீலி றப்பிக்கபில் ஹிக்மத்தி வல் மவ் இளத்தில் ஹஸனத்தி)
"(நபியே) நீர் உமது இரட்சகனுடைய பாதையின் பால் ஹிக்மத்தை (விவேகம்) கொண்டும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் அழைப்பீராக) என்று கூறுகின்றான். (16:125)
இவ்வசனத்தில் 'உத்உ' என்ற துஆப் பதம், வணக்கத்தைப் பொதிந்ததாயில்லாத அர்த்தத்தில் 'அழைப்பீராக' என்று வழங்கப்பட்டுள்ளது.
பிந்தியது பற்றி, வஸீலாவை ஆட்சேபிக்கும் பொருட்டு நிராகரிப்போர் அத்தாட்சியாக எடுத்துக் காண்பிக்கும் ஆயத்துக்களில் வணக்கத்தைப் பொதிந்துள்ள கருத்தில் பிரயோகிக்கப் பெற்றிருக்கும் துஆக்களைப் போல் அல்லாஹ்வுடன் வேறு தெய்வத்தை வணங்க வேண்டாமென்பதே. இப்பொருளையே வேறு ஆயத்துக்களும் விளக்கிக் காண்பிக்கின்றன.
"நீங்கள் அல்லாஹ்வை தவிர வணங்க (இபாதத்துச் செய்ய வேண்டாம்" (11:2, 11:26) என்றும்,
அவிசுவாசிகள் அல்லாஹ்வையன்றி தங்களுக்குப் பிரயோ ஜனத்தையாவது தங்கடத்தையாவது செய்ய இயலாதவற்றை (இபாதத்துச் செய்து) வணங்குகின்றார்கள். (10:18) என்றும், இவை போன்று இதர ஆயத்துக்கள் கூறுவதையும் சிந்தித்துச் சீர் தூக்கி ஆராய்ந்துண்ர்க!
எனவே, அன்பியா அவுலியாக்களை அழைத்துக் கூப்பிடுதல் கூடாது என்பதற்கு ஆதாரங்களாக எதிரிகள் கூறும் ஆயத்துக்களிலுள்ள 'துஆ' வானது, அல்லாஹ்வைத் தவிரவுள்ளவை தெய்வத் தன்மைக்கு உரித்தானவை, வணக்கத்திற்கு பாத்திரமானவை, என்று கருதியுள்ள அவிசுவாசிகள் விஷயத்தில் தான் பொருந்துமே யல்லாது, ஹகீகத்தில் எல்லாம் அல்லாஹ் ஒருவனைக் கொண்டே நடைபெறுகின்றன. தெய்வத்தன்மைக்கு தகுதியுடையான் வணக்கத்திற்குப் பாத்திரவான் அவனையன்றி வேறு எவருமில்லை என்று விசுவாசம் (ஈமான்) கொண்டுள்ள முஸ்லிம்கள் அன்பியா, அவுலியாக்களை விளித்து அழைக்கும் விஷயத்திற்கு முற்றிலும் பொருந்தாது என்பது யாருக்கும் தெரிந்த வெளிப்படையான விஷயமாகும்.
"உங்களில் சிலர் சிலரை அழைப்பதே போல உங்களுக்கிடையில் றஸுலை அழைப்பதை நீங்கள் ஆக்கிக் கொள்ளாதீர்கள்" என்ற (24:63) குறிப்புடன் கூடிய திருமறை வசனமொன்றுண்டு.
தப்ஸீர் காஜின் - தப்ஸீர் ரூஹுல்பயான் ஸாவீ முதலியவற்றில் அறிவிக்கப்பட்டுள்ளபடி, இதன் தாத்பரியம் யாதெனில் உங்களுள் சிலர் சிலரை கண்ணியக் குறைவாகவும், சாதாரணமாகவும் அழைப்பதை போல நபி பெருமானார், றஸுலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அழைக்காமல் கண்ணியத்துடனும், மரியாதையுடனும், யா றஸுலல்லாஹ்! யா ஹபீபல்லாஹ்! யா நபிய்யல்லாஹ்! போன்ற அழகிய, கண்ணியமான வார்த்தைகளைக் கொண்டு அழைக்க வேண்டுமென்பதே.
சில சந்தர்ப்பங்களில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அழைத்தல் இபாதத்திற்கு அவசியமானதாயும் ஆகி விடுகிறது.
(அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந் நபிய்யு)
"அருமை நபியவர்களே! உங்கள் மீது ஸலாம் உண்டாவதாக" என்று அவர்களை அழைத்தல் அத்தஹிய்யாத்தில் அவசியமான காரியமாகும். அத்தஹிய்யாத்து இவ்வழைப்பின்றி பூர்த்தியாகாது. அத்தஹிய்யாத்தின்றி தொழுகை பூர்த்தியாகாது. இதை கவனித்து நோட்டமிட வேண்டும்.
ஆகவே, முஸ்லிம்கள் கூப்பிட்டழைக்கும் விளிப்பு, அழைத்தல் சிலவேளை ஆகுமான காரியமாயும் சிலவேளை கட்டாயமான காரியமாயும் அமைந்துள்ளது என்பது மேற்சொன்ன ஆதாரங்களைக் கொண்டு நன்கு தெரியவருகிறது.
அல்லாஹ்வை அழைப்பதற்கு துஆ என்றும், மற்றவர்களை அழைப்பதற்கு 'நிதா' என்றும் சொல்லப்படும். இந்தத் தாரதம்மியத்தை அறியாதபடி 'யாறஸுலல்லாஹ் - யா வலிய்யல்லாஹ் யா முஹிய்யத்தீன் - யா ஷைகு' போன்ற பதங்களால் அழைத்தல் ஆகாது என்பதாகத் தெரியாத தன்மை கொண்டு வஹ்ஹாபிகளான சிலர் கூறுகின்றனர்" என்பதாக ஹஜ்ரத் ஷாஹ் முஹிய்யித்தீன் ஸாஹிபு வேலூரீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் பஸ்லுல் கித்தாபில் இமாம்களைக் கொண்டு அறிவிக்கின்றார்கள்.
மேலும் இத்தகைய விபரத்தை அல்லாமா முப்தீ மஹ்மூது ஸாஹிப் மதறாஸீ அவர்களும் பத்ஹுல் ஹக்கில் கூறியுள்ளார்கள். எனவே வஸீலாவை முன்னிட்டு அன்பியா, அவுலியா, காமிலீன்களை அழைத்துக் கூப்பிடுதல் ஒருக்காலும் இறை வணக்கமாய் மாறிவிடாது. ஷிருக்கும் அல்ல.
அஸ்ஹாபுஸ்-ஸுப்பாவிலுள்ள றபீஆ இபுனு கபுல் அன்ஸாரீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் றிவாயத்துச் செய்கின்றார்கள்:-
"நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு நானிருந்தேன். வுலுச் செய்வதற்குத் தண்ணீர், மிஸ்வாக்கு, சீப்பு வகையறாக்களை எடுத்துச் சென்று கொடுத்தேன். அச்சமயத்தில்; நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னை நோக்கி இம்மை, மறுமைக்குரிய நலவான காரியங்களில் உனக்குத் தேவையானவற்றை என்னிடத்தில்கேள்" என்று சொன்னார்கள்.
"தங்களுடன் சொர்க்கத்திலாகி இருப்பதை ஆசிக்கின்றேன்" என்று கூறினேன்.
"இத்தோடு இன்னும் வேறென்ன தேவை?" என்று மீண்டும் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வினவினார்கள்;.
"இதேயல்லாது வேறொன்றும் தேவையில்லை" என்று உரைத்தேன்.
மேலே குறிப்பிட்ட ஹதீது ஸஹீஹு முஸ்லிம் - இபுனு மாஜா முஃஜம் கபீர் தப்ரானீ - அஷிஃ அத்துல்லமஆத் ஆகிய கிரந்தங்களில் கூறப்பட்டிருக்கிறது.
இந்த ஹதீதில், நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், உனக்குத் தேவையானதை என்னிடம் கேள். ஸுவால் செய் என்று கூறியது இம்மை, மறுமைப் பேறுகளை அளிப்பதைக் குறிக்கின்றது என்பதாக ஹதீதின் விரிவுரையாளர்கள் வரைகின்றார்கள்.
ஷைகு அப்துல் ஹக்கு முஹத்திதுத் திஹ்லவீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் இந்த ஹதீதின் ஷரஹில், "இம்மையும் மறுமையும் உங்களால் கிடைத்த சன்மானத்தில் நின்றுமே உண்டானவை, மேலும், லவ்ஹுகலம் உடைய கல்வி உங்களின் ஞானங்களிலிருந்தே உண்டானவை.
(பஇன்ன மின் ஜுதிகத் துன்யா வளர்ரத்தஹா-வமின் உலூமிக்க இல்மல் லவ்ஹி வல்கலமி) என்று கஸீதத்துல் புர்தாவில் இமாம் பூஸரி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் சொல்லியிருப்பதையும் குறிப்பிட்டுள்ளார்கள்.
"ஆண்டவனுடைய உத்திரவு கொண்டு ஸர்வரே ஆலம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இம்மை, மறுமையின் அருட்கொடை நிஃமத்துகளை அளிக்கின்றார்கள். அவ்வாறாக அளிக்க வல்லமையுடையவர்கள்" என்பதே ஸுன்னத் வல்ஜமாஅத்தாரின் விசுவாசமாகும்.
(அன காஸிமுன் வல்லாஹு யுஃத்தீ)
"கொடுக்கின்றவன் அல்லாஹ், பங்கு வைப்பவன் நான்" என்று ஸஹீஹ் புகாரியில் காணப்படும் ஹதீதை, இமாம் இபுனு ஹஜர் மக்கீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள், ஷரஹு ஹம்ஸிய்யா, 192-வது பக்கத்தில் எடுத்துரைத்து "ஆண்டவன் தனக்குச் சொந்தமாயுள்ள உணவளித்தல் உள்பட அறிவு, ஞானம், வழிப்பாடு முதலிய எல்லாவிதமான பொக்கிஷங்களின் சாவிகளையும் தனக்குப் பிரதிநிதியும், (ஹபீபு) தோழருமான நபி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வசம் கொடுத்திருக்கின்றான். அவர்கள் பங்கு வைத்துக் கொடுக்கக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் மூலமாகவே சகலமும் அளிக்கப் படுகின்றன" என்பதாக கூறுகின்றார்கள்.
மேலும், புதூஹாத்துல் அஹ்மதிய்யா-பீ-மினஹில் முஹம்மதிய்யா, 89-வது பக்கத்தில், அல்லாமா ஷைகு சுலைமான் ஜமல் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களும் இப்படியே கூறுகின்றார்கள்.
"அல்லாஹ் ஒருவனைத் தவிர்த்து வேறு யாரிடமும் எந்தவித உதவியும் தேடவே கூடாது" என்ற வாதத்திற்குச் சிலர் இய்யாக்க நஃபுது-வஇய்யாக்க நஸ்த்தயீன்" என்ற (1:4) ஆயத்தை மேற்கோளாகக் காட்டுவதுடன், நபியோ, றஸுலோ, குத்போ, வலியோ யாருக்காயினும் லாபநஷ்டத்தை உண்டாக்கும் சக்தியுண்டென்று நம்புவதும், அவர்களிடம் உதவி தேடுவதும் மாபெரும் குற்றம் என்பதாய் விரிவுரையும் கூறுகின்றனர். இது அவர்களது அறியாமையையே காட்டுகின்றது.
ஏனெனில், ஸுரத்துல் பாத்திஹா, அம்ரு-நஹீ, ஏவல்-விலக்கல், மஸாயில்களை விட்டும் நீங்கியது, அதில் கட்டுப்பட்டதல்ல" என்று தப்ஸீர் அஹ்மதிய்யா கூறுகின்றது.
"ஏவல், விலக்கல் (அம்ரு, நஹீ) உடைய ஆயத்துக்கள் குர்ஆனில் ஐந்நூறும், ஹதீதில் மூவாயிரமும் காணப்படுகின்றன. இய்யாக்க நஃபுது-வ-இய்யாக்க நஸ்த்தயீன்" என்ற (1:4) ஆயத்து அதில் சேர்ந்ததல்ல" என்று வஸீலா ஜலீலா, 46-வது பக்கத்தில் சொல்லப்படுகிறது.
மேலும் அதே பக்கத்திலேயே, உன்னை ஒருவனென்னு உறுதிகொண்டு உனது வணக்கத்திற்கு உன்னிடமே உதவி தேடுகின்றோம் என்பதே 1:4 ஆயத்திற்குப் பொருளாகும். என்பதாக ஸெய்யிதுனா இபுனு அப்பாஸ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களைக் கொண்டு இக்ரிமா ரலியல்லாஹு தஆலா அன்ஹு ரிவாயத்துச் செய்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான விளக்க விபரத்தை ஸிராஜுல் ஹிதாயா 77-வது பக்கத்திலும், ஸாயிக்கத்துல் மவுத்துவஐனுல் ஹயாத்திலும், தப்ஸீர் மதாரிக்கிலும் காண்க.
ஆகவே, ஏவல் விலக்கலில் சேராத ஒன்றைச் செய்தல் ஆகுமென விளங்கக் கிடக்கின்றது. இந்த ஆயத்து ஏவல், விலக்கலுடையது அல்லவாகையால், அன்பியா அவுலியாக்கள் பால் உதவியொத்தாசைத் தேடக் கூடாதென்பதற்கு ஆதாரமாகாது, உதவி தேடக் கூடாதென்றிருக்குமெயானால் (வஸ்த்தயீனு பிஸ்ஸபுரி வஸ்ஸலாத்தி) - பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள்" என்ற வேத வாக்கும், (வப்த்தகூ இலைஹில் வஸீலத்த) "அவனளவில் வஸீலாவைத் தேடிக்கொள்ளுங்கள்" என்ற (5:35) வேதவாக்கும் வந்திருக்காது. (உத்லுபல் ஹவாயிஜ இலாதவிர் ரஹ்மத்திமின் உம்மத்தீ) என்னுடைய றஹ்மத்து உடைய கூட்டத்தார் (அவுலியாக்) களிடத்தில் உங்களுடைய தேவைகளைத் தேடிப் பெற்றுக் கொள்ளுங்கள்" என்ற ஹதீதும்.
(இதா தஹய்யர்த்தும் பில் உமூர்p பஸ்த்தயீனூ மின் அஹ்லில் குபூர்) "கருமங்களில் நீங்கள் திகைப்படைந்து விடுவீர்களேயானால் கபுருகளை உடையவர்களை (அவுலியாக்களை)க் கொண்டு உதவி தேடுங்கள்" என்ற ஹதீதும்.
"எவருடைய கால்நடைப் பிராணியாவது, காணாமற்போய் விட்டால், அல்லாஹ்வின் அடியார்களே, அல்லாஹ் உங்களுக்கு நல்லருள் பாலிப்பானாக, தாங்கள் எனக்கு உதவி செய்யுங்கள் என்று கூப்பிட்டுக் கேளுங்கள்" என்ற ஹதீதும்.
"எவருக்காவது உதவி தேவைப்படுமானால் அல்லாஹ்வுடைய அடியார்களே! எனக்கு உதவி புரியுங்கள்! அல்லாஹ்வுடைய அடியார்களே! எனக்கு உதவி புரியுங்கள்! அல்லாஹ்வுடைய அடியார்களே! எனக்கு உதவி புரியுங்கள்! என்று அவர் கூறட்டும்" என்ற ஹதீதும்,
மற்றும் இவை போன்ற ஹதீதுகளும் வந்திருக்கத் தேவையில்லை.
முஹக்கிகுல் ஹனபிய்யி, அஷ்-ஷைகு அப்துல்கனி நாபல்ஸீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள், திமஷ்கு நகரில் ஸலீமா என்ற இடத்தில் குர்ஆன் ஷரீபுக்கு வியாக்கியான விளக்கம் செய்துக் கொண்டிருக்கையில், (யா அய்யுஹல்லதீன ஆமனூ இஸ்த்தயீனூ பிஸ்ஸப்ரி வஸ்ஸலாத்தி) 'ஓ, ஈமான் கொண்டவர்களே! பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள்!" என்ற (25:153) ஆயத்தைச் சுட்டிக்காட்டி, "ஆண்டவனைத் தவிர்த்துப் பிறரிடம், உதவி தேடக்கூடாது என்று சொல்கிறவனுக்கு இது ரத்தாகும், அப்படிச் சொல்கிறவன் காபிராகி விட்டான், ஏனெனில் குர்ஆனுடைய நஸ்ஸுக்கு (தெளிவாகவும், வெளிப்படையாகவும் வந்துள்ள ஏவலுக்கு) மாற்றமாக இருக்கும் காரணத்தினால், தேவைகள் நிறைவேற அவுலியாக்களைக் கொண்டு உதவி தேடுவதே சிறந்த வழியாகும்" என்று கூறினார்கள்.
விபரத்தை அல்லாமா ஷைகு யூஸுபுன் னபஹானீ, மிஸ்ரீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள், 'வாஹிதுல் ஹக்கு 251-வது பக்கத்தில் வரைந்துள்ளார்கள்.
"ஜீவிய காலத்தில் உதவி தேடுவதற்கு எவர்கள் தகுதியானவர்களோ அவர்களிடம் வபாத்திற்குப் பிறகும் உதவி தேடலாம்" என்பதாக இமாம், ஹுஜ்ஜத்துல் இஸ்லாம், கஸ்ஸாலீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களைக் கொண்டு அல்லாமா ஷைகு அப்துல் ஹக்கு முஹத்திதுத் திஹ்லவீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் 'அஷிஅத்துல் லமஆத்-தர்ஜுமா மிஷ்காத்' முதல் பாகத்தில் வரைந்துள்ளார்கள்.
"கஷ்ட காலத்தில் அவுலியாக்களிடத்தில் இரட்சிக்கும்படி உதவி தேடுதல் கூடுமா? என்ற இமாம் ஷஹாபுத்தீன் றமலீ ஷாபியீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களிடத்தில் வினவப்பட்ட போது அவர்கள் கொடுத்த விளக்கமாவது:
"அன்பியா, அவுலியா, ஸாலிஹீன்களிடத்தில் இரட்சிக்கும்படி உதவிதேடுதல் கூடும். மவுத்துக்குப் பிறகும் அவர்கள் இரட்சிப்புத் தரக்கூடியவர்கள். ஏனெனில், அன்பியாக்களுடைய முஃஜிஸாத்தும் அவுலியாக்களுடைய கறாமாத்தும் மவுத்துக்குப் பிறகும் விடுபட்டுப் போக மாட்டா. அவர்கள் ஹயாத்துள்ளவர்கள். பர்ஜகுடைய ஆலத்தில் தொழவும் செய்கின்றார்கள். ஹஜ்ஜும் செய்கின்றார்கள். இவ்வாறு ஆதாரமான ஹதீதுகள் வந்திருக்கின்றன".
மேற் சொன்ன விபரம், அல்புதூஹாத்துல் அஹ்மதிய்யா 90-வது பக்கத்தில், அல்லாமா ஷைகு ஸுலைமானுல் ஐமல் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களும். 'வாஹிதுல் ஹக்கு, 69-வது பக்கத்தில் அல்லாமா ஷைகு யூஸுபுன் னபஹானீ மிஸ்ரீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களும் எடுத்துரைத்திருக்கிறார்கள்.
"அவுலியாக்களிடத்தில் உதவிதேடும் விஷய சம்பந்தமாய் 'கஷ்பு' (கல்புக்கண்) உடைய மஷாயிகுகளைக் கொண்டுள்ள ரிவாயத்துக்கள் அநேகமுண்டு. இது பற்றி கிதாபுகளிலும், ரிஸாலாக்களிலும் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
வாதத்திற்கு மருந்துண்டு. பிடிவாதத்திற்கு மருந்தில்லையாதலால் பிடிவாதமாக மறுப்பவர்களுக்கு அவை பிரயோஜனங் கொடுக்கமாட்டா. ஆகையால், அது பற்றி இங்கு எழுத வேண்டிய அவசியமில்லை. இத்தகைய பிடிவாதத் தன்மையை விட்டும் ஆண்டவன் நம்மைக் காப்பாற்றிக் கொள்வானாக!" என்பதாக ஷைகுல் ஹிந்து, அப்துல் ஹக் முஹத்திதுத் திஹ்லவீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள், 'அஷிஅத்துல் லமஆத் தர்ஜுமா மிஷ்காத்' பாகம் 3, பக்கம் 375-ல் கூறுகின்றார்கள்.
மக்ரீபு தேசத்தில் வலுப்பமான பகீஹாயும்;, பிரபல்யமான ஆரிபாயுமிருந்த ஸெய்யிது அஹ்மது இபுனு ஐர்ரூக்குஷ் ஷாதுலீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்:-
"அவுலியாக்கள் ஹயாத்தில் செய்யும் உதவி வலுப்பானதா? மௌத்திற்கப்பால் செய்யும் உதவி வலுப்பமானதா?" என்று ஷைகு அபுல் அப்பாஸ் ஹள்ரமீ அவர்கள் என்னிடம் வினவியதற்கு, மௌத்தான பின்பு அவர்கள் புரியும் உதவிதான் மிகவும் வலுப்பமானது" என்று கூறினேன். எனது இந்த விடையை அவர்கள் ஒப்புக்கொண்டார்கள் என்பதே.
விபரம் 'அஷிஅத்துல் லமஆத் தர்ஜுமா மிஷ்காத்' 1-வது பாகம் 633-வது பக்கத்தில் காணப்படுகின்றது.
"மௌத்திற்குப் பிறகு அவுலியாக்களிடத்தில் உதவி தேடலாமென்பது மிகுதமான மஷாயிகுமார்களின் தீர்மானமாகும்.
ஆரிபீன்களில், உலமாக்களில் மிகுதமான பேர்களுடைய அகீதா (நிர்ணயம்) இதுவேதான்" என்பதாக இமாம் ஷைகு அபூஸயீது ஸலமீ ஹனபீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் ஷரஹ் பர்ஜக்கில் கூறுகின்றார்கள்.
மேலும், அவர்கள் அதில் மௌத்தை இரு வகையாக விபரிக்கின்றார்கள்.
"மௌத்துக்குப் பிறது ரூஹு நித்தியமானது. அழிவற்றது. ஆனால் இந்த வெளிரங்கமான திரேகம் அழிந்துவிடும். இவர்கள் சாமான்யர்களான அவாம்கள். இவர்கள் பிறருக்கு உதவி செய்ய சக்தி பெற்றவர்கள் இது ஒருவகை. மௌத்திற்குப் பிறகு ரூஹும் அழியாது, உடலும் அழியாது. உள்ரங்கமான உயிருடலுடன் ஹயாத்துடனே என்றுமிருப்பர். இவர்கள் அன்பியா, அவுலியாக்கள், உயிரோடு இருப்பவர்களுக்கு இவர்கள் உதவி செய்ய சக்தி பெற்றவர்கள். இது மற்றொரு வகை.
ஸஹீஹான ஹதீதுகளில் இதற்குப் பலமான ஆதாரங்களுண்டு. இதை எவரும் மறுக்க சக்தி பெற மாட்டார்கள்" என்று அவர்கள் கூறியுள்ளார்கள்.
வஸீலா - சிபாரிசு - இஸ்த்திம்தாது - இஸ்த்திகாதா -இஸ்த்திஷ்பா -இஸ்த்தி ஆனா முதலிய பதங்கள் பலவிதமாக இருப்பினும் இவை கருத்தில் ஒன்றே.
ஒத்தாசை தேடல், சிபாரிசு தேடல், உதவி தேடல், இரட்சிப்புத் தேடல், நோய் நிவாரணம் பெறத் தேடல், உபகாரம் தேடல் முதலியன முறையே அவற்றின் பதப்பொருளாகும்.